சீதாராம் யெச்சூரி சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்திய எய்ம்ஸ் ஊழியர்கள் என்ற தகவல் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’சீதாராம் யெச்சூரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை!’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில் ‘’The picture of the day! AIIMS
Com @SitaramYechury
The final respect
AIIMS மருத்துவமனையில், தன்னுடைய உடல் பாகங்கள் மற்றும் உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கிய தோழர் சீதாராம் யெச்சூரிக்கு தங்கள் இறுதி வணக்கத்தை தெரிவிக்கும் மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் கீழே, சடலம் ஒன்றுக்கு, மருத்துவர்கள் மற்றும் சக ஊழியர்கள் இறுதி வணக்கம் செலுத்துவது போன்ற புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படத்தை கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த படம் 2016ம் ஆண்டு சீனாவில் எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது.

சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் CGTN இதுபற்றி அப்போதே செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, திபெத் பகுதியில் சீன அரசு சார்பாக, மருத்துவர் பணி செய்த 41 வயதான Zhao Ju என்பவர் 2016ம் ஆண்டு உயிரிழந்தார். அவருடைய உடல் உறுப்புகள் அப்போது தானமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றை எடுத்து, மேற்கண்ட வகையில், ‘’சீதாராம் யெச்சூரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை’’ என்று குறிப்பிட்டு சிலர் வதந்தி பரப்புகறார்கள்.

News Link 1 l News Link 2

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:சீதாராம் யெச்சூரி சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்திய எய்ம்ஸ் ஊழியர்கள் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False