
‘‘என்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்’’, என்று திருச்சி சாதனா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’கருணாநிதி தனம். தன்னை பயன்படுத்தி கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் திமுக முக்கிய பிரமுகர்- திருச்சி சாதனா.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி, என்று தெரியவந்தது.

இதன்படி, உண்மையான நியூஸ் கார்டில், ‘’ரீல்ஸ் தயாரித்து ஆட்சிக்கு வந்த தவெக – முன்னாள் சபாநாயகர் அப்பாவு,’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதனை வேண்டுமென்றே எடிட் செய்து, அரசியல் உள்நோக்கத்துடன் வதந்தி பரப்புகிறார்கள், என்று நமக்கு தெளிவாகிறது.
கூடுதல் ஆதாரத்திற்காக, புதிய தலைமுறை ஆசிரியர் குழு தரப்பிலும் இதுபற்றி பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram


