
‘‘VV மினரல்ஸ் குடும்பத்தை சந்தித்த கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தமிழக வரலாற்றில் கொடூரமான கனிமவள கொள்ளையன் என்றால் அது வைகுண்டராஜன் VV மினரல்ஸ்… இந்த கனிமவள கொள்ளையன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்க வேண்டிய அவசியம் கனிமவள துறை அமைச்சருக்கு என்ன இருக்கு? கனிமள கொள்ளையை தடுப்பேன் சொல்லிவிட்டு அடுத்த நாளே அந்த கொள்ளைக்கும்பலின் தலைவன் குடும்பத்தை கூப்பிட்டு சந்திக்கும் அந்த மனசு தான் சார்… வரிசையா வாங்க வந்து எங்க ஆட்சிக்கு கமிஷன் தந்துட்டு போங்க மொமன்ட் மாதிரி இருக்குல்ல ..
ஆனா கடந்த திமுக ஆட்சியில திமுககாரன் தான் கொள்ளையடிக்குறதா நரேட்டிவ் செட் பண்ணி இருப்பானுங்க!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, டி.கே. பிரபுவுடன் நிற்கும் நபர் தவெக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி ஆவார். இவர், VV Minerals வைகுண்டராஜன் மகன் அல்லது நேரடி வாரிசு கிடையாது. விபின் தவெக நிர்வாகி என்பதுடன், TPV Multiplex உரிமையாளர். அவரது தந்தை பெயர் T.P. Velsamy Nadar.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விபின் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

கூடுதல் ஆதாரத்திற்காக, தவெக தலைமை அலுவலகம் மற்றும் விபின் தரப்பிலும் இதுபற்றி பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
இதன்படி, கடந்த மே 22, 2026 அன்று கனிம வளம் கடத்தலை தடுக்க கோரி கனிம வளத்துறை அமைச்சர் திரு. T.K.பிரபுவிடம் விபின் சக்கரவர்த்தி மனு அளித்தார். அந்த புகைப்படத்தை எடுத்து, தவறான தகவல் பகிரப்படுவதாக, நமக்கு தெளிவாகிறது.

எனவே, விபின் சக்கரவர்த்தி, VV Minerals வைகுண்டராஜன் மகன் அல்லது நேரடி வாரிசு கிடையாது; நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


