
‘‘பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம்,’’ என்று மு.க. ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், உதயநிதி ஸ்டாலின் பலூன் ஊதுவது போன்று விகடன் கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது.
விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட கார்ட்டூன் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது விகடன் பெயரில் பரவும் வதந்தி, என்று தெரியவந்தது. இந்த கார்ட்டூனில், மாதாந்திரம் என்பதற்குப் பதிலாக ‘மாதாந்தம்’ என்று எழுத்துப் பிழையுடன் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 31.5.1025 என்று தேதி இடம்பெற்றுள்ளது. தற்போது 2026ம் ஆண்டுதான் நடைபெறுகிறது; 1025 அல்ல…

அடுத்தப்படியாக, விகடன் ஆசிரியர் குழுவில் கேட்டபோது, ‘’எங்களது பெயரில் இதுபோன்று கார்ட்டூன் எடிட் செய்து, தவறான தகவல் பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


