தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது’’, என்று குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’10 வயது சிறுமியின் உயிருக்கான பதில்! தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது; நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மட்டும் கேள்வி எழுப்புங்கள். சிறுமியைக் கொன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், வேறு என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு?- குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ்.’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Archived Link      

polimer news லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது Polimer News பெயரில் பரவும் வதந்தி, என்று தெரியவந்தது. 

கூடுதல் ஆதாரத்திற்காக, Polimer News ஆசிரியர் குழு மற்றும் தவெக தலைமை அலுவலகத்திலும் இதுபற்றி பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply