பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம்,’’ என்று மு.க. ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இனிமேல் யாரும் பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்- ஸ்டாலின் பேச்சு’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Archived Link      

sun news லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது Sun News பெயரில் பரவும் வதந்தி, என்று தெரியவந்தது. குறிப்பிட்ட நியூஸ் கார்டில், 24/May/2025 என்று தேதி உள்ளது. 

இதன் அடிப்படையில் தகவல் தேடினோம். முதலில் Sun News ஆசிரியர் குழுவில் கேட்டபோது, ‘’நாங்கள் வெளியிட்ட வேறொரு செய்தியை எடுத்து, எடிட் செய்து, தவறான தகவல் பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.  

மேலும், உண்மையான செய்தியின் முழு வீடியோ லிங்கை நமக்கு கொடுத்தனர்.

இதில் எங்கேயும் ‘’பாஜக பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம்,’’ என்று மு.க.ஸ்டாலின் பேசவே இல்லை. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply