‘’குடித்துவிட்டு சாலையில் சுற்றி திரியும் சன்னி தியோல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Claim Link l Archived Link

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தெரிந்து கொள்ளுங்கள் இவர்தான் பாஜக எம். பி. நடிகர் சன்னி டியோல், நடிகர் தர்மேந்திராவின் மகன். முஸ்லிமாக மாறி தர்மேந்திராவை முஸ்லிமாக மாற்றி கல்யாணம் செய்து கொண்டவர்தான் சன்னி டியோளின் அம்மாவுக்கு சக்களத்தியான மதுரா எம்.பி. மாமி ஹேமா மாலினி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ பற்றி நாம் தகவல் தேடியபோது, ஏற்கனவே இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒன்று என்பதைக் கண்டோம்.

மேலும், இதுபற்றி சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதமும் எழுந்துள்ளதாகச் செய்திகள் காணக் கிடைத்தன.

DNA India link l Times of India Link l NDTV link

தன் மீது மேற்கண்டவாறு வதந்தி பகிரப்படும் சூழலில், உடனடியாக, நடிகர் சன்னி தியோல் அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் கண்டோம். அந்த பதிவில், Safar என்ற புதிய படத்தின் ஷூட்டிங் காட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, குறிப்பிட்ட படத்தின் தயாரிப்பாளரும் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

Bollywoodhungama Link

எனவே, மும்பையில் உள்ள Juhu பகுதியில் இரவு நேத்தில் நடைபெற்ற சினிமா ஷூட்டிங் காட்சியை எடுத்து, சன்னி தியோல் குடிபோதையில் சுற்றி திரிவதாக, வதந்தி பரப்பியுள்ளனர், என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘குடித்துவிட்டு சாலையில் சுற்றி திரியும் சன்னி தியோல்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False