பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் இடையூறு செய்த நபரை BSF படை வீரர்கள் சுட்டனரா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் இடையூறு செய்த நபரை சுட்ட BSF படை வீரர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ மேற்கு வங்கம் பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் கல் எறிஞ்ச பங்களாதேஷ்காரணை நமது BSF படை வீரர்கள் ஒருத்தனை சுட்டதும் மற்றவர்கள் தப்பித்து ஓடுவதை பாருங்கள்…’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது நேபாளம் நாட்டில் எடுக்கப்பட்டது என்றும், இதற்கும் இந்தியா – வங்கதேசம் இடையிலான எல்லை விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது. 

இதன்படி, ‘’ Preparation for election intensifies, army soldiers continue rehearsal
Security agencies are reported to be on high alert to conclude the election peacefully and fairly.
#facebookreelsviralviralシfypシ゚ #atvnewsnepal #goviralreels #NepaliNewsToday ,’’ என்ற தலைப்புடன், Atv News எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 11, 2026 அன்று நாம் ஆய்வு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. 

இதன்மூலமாக, இது நேபாளம் நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்று நமக்கு தெளிவாகிறது.  

இதேபோன்று Tanahu District Police Office சார்பாகவும் ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க விடாமல் இடையூறு செய்த நபரை BSF படை வீரர்கள் சுட்டனரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply