
‘‘காவி உடையில் திருப்பதி சென்ற திருமாவளவன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்’’, என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், காவி உடையில் திருமாவளவன் போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தந்தி டிவி பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது. மேலும், இந்த நியூஸ் கார்டில் Gemini AI லோகோவும் இடம்பெற்றுள்ளது.

உண்மையான நியூஸ் கார்டில், திருமாவளவன் வெள்ளை நிற ஆடையில் நிற்கும் புகைப்படமே இடம்பெற்றுள்ளது.

முழு வீடியோ லிங்க் இதோ…
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Dailythanthi l Dinamalar l News7 Tamil
கூடுதல் ஆதாரத்திற்காக, தந்தி டிவி ஆசிரியர் குழுவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


