
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியின் ஒத்திகை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
மூன்று வெவ்வேறு வீடியோக்களை இணைத்து, மீண்டும் மீண்டும் அவை ஒளிபரப்பாகும் வகையில் 19 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகளின் அசத்தல் டிராக்டர் பேரணி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை புதுயுகம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜனவரி 13ம் தேதி நேரடி ஒளிபரப்பு என்பது போல வெளியிட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
மூன்று வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இந்தியாவில் எடுக்கப்பட்டது போல உள்ளது. ஒன்று மட்டும் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த நபர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா வாகனம் போன்று மான்கள் பொம்மைகள் பொருத்தப்பட்டிருந்தது. எனவே, இது விவசாயிகள் பேரணி இல்லை என்பது தெளிவானது. எனவே, அதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, மின் விளக்குகளால் ஜொலிக்கும் டிராக்டர் பேரணியானது அயர்லாந்தில் எடுக்கப்பட்டது என்று கடந்த 2020 டிசம்பர் 16ம் தேதி வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தெளிவான முழு வீடியோவைப் பார்க்கும் போது கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் என இது கிறிஸ்துமஸ் பேரணிதான் என்பதை உறுதி செய்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மற்ற இரண்டு பேரணி எங்கே நடந்தது என்று தேடினோம். நமக்கு அவை எங்கு நடந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஏராளமான டிராக்டர் பேரணி நடந்து வருகிறது, பலரும் அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். செய்தி ஊடகங்களும் ஏராளமான டிராக்டர் பேரணி வீடியோவை பதிவிட்டு வருகின்றன.
எனவே, பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியபோதும் கூட நமக்கு இந்த வீடியோக்கள் எங்கு எப்போது எடுக்கப்பட்டவை என்பதைக் கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் சுவரில் இந்தி எழுத்துக்கள், கடை பெயர் பலகையில் இந்திய மொழியில் எழுதியிருப்பது ஆகியவை இவை இந்தியாவில் நடந்தது என்பதை உறுதி செய்கின்றன.
இதன் அடிப்படையில் இந்த பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டெல்லி டிராக்டர் பேரணி என்று பகிரப்படும் வீடியோ அயர்லாந்தில் நடந்த கிறிஸ்துமஸ் பேரணியின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்க|ளுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title: டெல்லி டிராக்டர் பேரணி ஒத்திகை என்று கூறி பகிரப்படும் கிறிஸ்துமஸ் பேரணி வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: Partly False
