ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘captanin muthal thuroki பிரேமலதா.’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் வடிவேலு மற்றும் பிரேமலதா அருகருகே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக, தேமுதிக., அறிவித்துள்ளது. 

Dinamani l Dinamalar l News 7 Tamil 

ஆனால், தேமுதிக எடுத்துள்ள இந்த முடிவு விஜயகாந்துக்கு செய்யும் துரோகம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில், விஜயகாந்த் பற்றி காட்டமாக விமர்சித்ததால், சினிமா வாய்ப்பின்றி அவதிப்படும் வடிவேலு உடன் ஒரே மேடையில் பிரேமலதா அமர்ந்தார் என்று கூறி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

Hivemoderation, Wasitai போன்ற இணையதளங்கள் உதவியுடன் சரிபார்த்தபோது, மேற்கண்ட புகைப்படம் AI மூலமாக தயாரிக்கப்பட்டது, என்று தெரியவந்தது.

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் தேமுதிக தலைமைக்கழகத்தில் பேசி, இது போலியான புகைப்படம், என்று உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply