‘’திமுக ஆட்சியில் மது விருந்து நடத்தும் மாணவிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:



இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில் ‘’ பள்ளி குழந்தைகள் சாராயம் குடிக்க யார் காரணம்? அதில் ஆசிரியருக்கு பங்கு உண்டு தானே? நீங்க சொல்லி கொடுத்த பாடம் இப்படிதான் இருந்தது. இதற்கு காரணம் யார்? இதுபோல் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு சாதாரண மனுஷனை கைது செய்வது தான் அதிகார திமிர்!!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த வீடியோ கடந்த 2019ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்று, என தெரியவந்தது.



FB Post Link

மேலும் சில ஆதாரங்கள் இதோ…

Link 1 l Link 2

இதன்படி, திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2019ம் ஆண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக, தெரியவருகிறது. அப்போது, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியே நடைபெற்றது. எனவே, இதற்கும், திமுக ஆட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சிலர் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற பழைய வீடியோக்களை எடுத்து, புதியது போல குறிப்பிட்டு திமுக., அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   திமுக ஆட்சியில் மது விருந்து நடத்தும் மாணவிகள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ.
Claimed By :  Social Media User
Fact Check :  MISLEADING