ஆசிபா கொலை வழக்குக் குற்றவாளிகள் 8 பேர் விடுதலை: ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

‘’ஆசிபா கொலையாளிகள் விடுதலை,’’ என்ற தலைப்பில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link Rosy S Nasrath என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஆசிபா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படடுள்ள நபர்களின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஆசிபா கொலையாளிகள் விடுதலை ஆசிபா இன்று மீண்டும் வேட்டையாடப்பட்டாள். தேவிஸ்த்தான் எனப்படும் அந்த பெண் கடவுள் கோவிலின் […]

Continue Reading

தேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 பணம் தருகிறோம் என்று ஸ்டாலின் சொன்னாரா?

‘’தேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 தருகிறேன் என்று சொன்னியே சுடல,’’ என்ற தலைப்பில், மு.கஸ்டாலின் புகைப்படத்தை மையமாக வைத்து பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link புதியதோர் தமிழகம் செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும், சுப்ரமணியபுரம் படத்தில் வரும் காட்சி ஒன்றையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’தேர்தல்ல ஜெயிச்சா 72000 தருவேன், […]

Continue Reading

யானை சின்னத்தில் அழுத்தினால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது: வைரல் வீடியோ

‘’யானை சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது,’’ என்று கூறி ஒரு சர்ச்சையான வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Tamil Entertainment என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ இப்படி இருந்தா 300 தொகுதியென்ன…3000 தொகுதி கூட ஜெய்ப்பீங்கடா,’’ என்றும் எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

ராகுல் காந்தியிடம் இந்தி பேசிய ஸ்டாலின் பேரன் பேத்திகள்: ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

மு.க.ஸ்டாலின் பேரன், பேத்திகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்தியில் பேசி அசத்தியதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ராகுல் காந்தியிடம் இந்தி பேசி அசத்திய ஸ்டாலின் பேரன் பேத்திகள்….. உங்க வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கலாம் எங்க பிள்ளைகள் இந்தி படிக்க கூடாதா ? Archived link தி.மு.க தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் […]

Continue Reading

குஜராத் கலவரத்திற்கு காரணமானவர் பிரதமர்: ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்

‘’குஜராத் கலவரத்திற்கு காரணமானவன் பிரதமர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Troll Mafia என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மோடி, அமித் ஷா, பிரதாப் சாரங்கி, சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்டோர் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குஜராத் கலவரத்திற்கு காரணமானவன் பிரதமர், நீதிபதியை கொன்றவன் உள்துறை அமைச்சர், பாதிரியாரை குழந்தைகளோடு எரித்து கொன்றவன் […]

Continue Reading

பாலிசி கட்ட முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரும்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவு?

‘’பாலிசி கட்ட முடியாதவர்களுக்கு இதுவரை செலுத்திய தொகையை திருப்பி தரும்படி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: சசி செந்தமிழன் என்பவர் இந்த பதிவை, சிரிப்புமழை என்ற ஃபேஸ்புக் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:எல்ஐசி பாலிசி செலுத்துவோர், ஓரிரு தவணை செலுத்திவிட்டு, பின்னர் எதிர்பாராத காரணங்களால், […]

Continue Reading

காவிப்படை அணிவகுப்பை நடத்தினாரா யோகி ஆதித்யநாத்?

வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு ஒன்றை நடத்தியதாக ஃபேஸ்புக்கில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு Archived link இரண்டு படங்களை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். அதில், மாடி பஸ் போன்ற ஒன்றில் நிறைய பேர் உள்ளனர். லட்சக்கணக்கானோர் திரண்டு பேரணி செல்வது போல் உள்ளது. முழுக்க காவி பொடி தூவப்பட்டு, காவி வண்ணமாக […]

Continue Reading

கருணாநிதி பிறந்த நாள் சர்வதேச ஊழல் தினமா?

‘’கருணாநிதி பிறந்த நாள் – சர்வதேச ஊழல் தினம்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link குமரிமைந்தர்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பார்க்கும்போதே ஃபோட்டோஷாப் செய்த ஒன்று என தெளிவாக தெரிகிறது. இருந்தாலும், இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவில் ரெட் மார்க் செய்த பகுதியில், […]

Continue Reading

திருவள்ளுவர் சிலை சிங்கார சென்னையில் உள்ளது: ஃபேஸ்புக் பதிவால் வந்த சர்ச்சை

‘’சிங்கார சென்னை,’’ என்ற தலைப்பில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் சென்னையில் உள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Aashiq என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை கத்திப்பாரா மேம்பாலம், டைடல் பார்க், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மெட்ரோ, கோயம்பேடு பேருந்து நிலையம், சிஎம்பிடி பழ மற்றும் பூ […]

Continue Reading

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி இளவரசர்?

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை, ஜெய் ஶ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தினால், சவுதியில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாமியராக மாற்றுவேன் என்று இந்தியாவுக்கு சவுதி இளவரசர் எச்சரக்கை விடுத்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குடிக்கிற கஞ்சியிலே மண்ணள்ளி போடப்போற…… RSS -BJP இந்துத்தீவிரவாதிகளால் வயித்துப்பிழைப்புக்காக சென்ற இந்துக்களுக்கு ஆபத்து. Archived link ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இந்துத் தீவிரவாதிகளால் வயிற்றுப் பிழைப்புக்காக சவுதி சென்ற […]

Continue Reading

தன்னுடைய உதவியாளர் கொலை வழக்கில் ஸ்மிருதி இரானிக்கு தொடர்பா?

அமேதி தொகுதியில் வெற்றிபெற காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர் கொலைக்கு ஸ்மிருதி இரானியே காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மார்ட்டின் உதவியாளர் இறந்தால் அது மார்ட்டின் கைவண்ணம். ஸ்மிருதி ராணி உதவியாளர் இறந்தால் அது யார் கைவண்ணம்?? Archived link மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செட்டிங்கை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் ஸ்மிருதி இரானி உதவியாளர் சுட்டுக்கொலையா என்று உங்கள் நியூஸ் (Satire news) […]

Continue Reading

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம்- குதர்க்கமான ஃபேஸ்புக் பதிவு

‘’விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம், பால்ராஜாம்,’’ என்ற கிண்டல் தொனியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link ஆமைக்கறி சைமன் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பார்க்கும்போதே, சீமானை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என, வேண்டுமென்றே, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கீழ் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார்கள் என தெளிவாகிறது. இருந்தாலும், இதனை உண்மை என நம்பி பலரும் […]

Continue Reading

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்!” – ரஜினிகாந்த் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிழைக்க வந்த நாயின் பேச்சை பார்….இந்த லூசு பின்னாடியும் ஒரு மதி கெட்ட தமிழ் கூட்டம்…த்த்த்தூதூதூ????? Archived link நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில், “மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்” என்று உள்ளது. அதே படத்தில் மிகச் சிறியதாக, “பிரதமர் மோடிக்கு […]

Continue Reading

எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு அளித்த பா.ம.க? – நகைச்சுவை என்ற பெயரில் விஷம செய்தி

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பா.ம.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அந்த திட்டத்துக்கு பா.ம.க தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது என்றும் ஒரு கருத்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு பாமக ஆதரவு. ?️?மானங்கெட்ட பிழைப்பு ?️ Archived link தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் செந்தில் நடித்த காட்சியை எடுத்து, […]

Continue Reading

எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மூன்று பெண்கள் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரி 3 பெண்கள் கற்பழித்து கொலை. இதை மறைப்பதற்கு சினிமா பைத்தியங்களை வைத்து நேசமணி கூத்தாடி வடிவேலு கதையைப் பரப்பிவிட்டுள்ளது வேதனை. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக தற்கொலை செய்திகளை […]

Continue Reading

தோழியின் பேண்டை கழற்றி நடுரோட்டில் விட்டுச்சென்ற கத்ரினா கைஃப்?– ஏஷியாநெட் செய்தி உண்மையா?

ஏஷியாநெட் தமிழில், தோழியின் பேண்டை கழற்றிவிட்டு நடுரோட்டில் உள்ளாடையுடன் விட்டுச்சென்ற கத்ரினா கைஃப் – வைரல் வீடியோ என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். இது என்ன விவகாரமான செய்தியாக இருக்கிறதே என்று ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: தோழியின் பேண்ட்டை கழட்டி நடு ரோட்டில் உள்ளாடையோடு விட்டு சென்ற பிரபல நடிகை! வைரல் வீடியோ Archived link 1 Archived link 2 ஏஷியாநெட் தமிழில், 2019 மே 31ம் தேதி தோழியின் பேண்டை கழட்டி நடு […]

Continue Reading

ஆஸ்திரேலிய பாதிரியாரை உயிரோடு எரித்துக் கொன்றவர் பிரதாப் சாரங்கி– பகீர் ஃபேஸ்புக் பதிவு

மத்திய அமைச்சரவையில் மிகவும் எளிமையான நபர் என்று சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுபவர் பிரதாப் சாரங்கி. ஒடிஷாவில் ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருக்கும் தொடர்பு உண்டு என்று பகீர் குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மீடியா பயங்கரவாதம்! Archived link ஆஸ்திரேலிய பாதிரியாரின் குடும்ப படம், எரிக்கப்பட்ட அவரது வாகனம் மற்றும் பிரதாப் சாரங்கி பதவி ஏற்றபிறகு பிரதமர் […]

Continue Reading