
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் எடுக்கப்பட்ட கடைசி நிமிட காட்சிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
விமானத்திற்குள் புகை மண்டலமாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகமபா பாஹாத்தில் விபத்து நடந்த விமானத்தின் இருதி நிமிடங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற விமானம் 2025 ஜூன் 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்திற்குள் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020ம் ஆண்டிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 2020ம் ஆண்டிலிருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதன் மூலம் இது அகமதாபாத் விமானத்திற்குள் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ இல்லை என்பது உறுதியானது.
இந்த வீடியோ தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்தோம். அப்போது 2020ம் ஆண்டு ருமானியா நாட்டின் தலைநகர் புக்கரெஸ்ட் இருந்து லண்டன் (Bucharest to London) வந்த விமானத்திற்குள் திடீரென்று புகை பரவியது. உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது என்று செய்திகள் நமக்குக் கிடைத்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
உண்மைப் பதிவைக் காண: metro.co.uk I Archive
முடிவு:
2020ம் ஆண்டு பழைய வீடியோவை எடுத்து அகமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தின் கடைசி நேர காட்சிகள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்திற்குள் கடைசி நிமிடங்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
