‘’ஆடு அண்ணாமலைக்கு புளியந்தோப்பு அஞ்சலையின் மடல்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ கட்சிய விட்டு நீக்கிட்டில்ல? அதோட நிப்பாட்டு. நற்பெயரு மயிருனுலாம் சொல்லாத. செருப்பு பிஞ்சுரும். என்றும் தாயகப் பணியில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியுள்ள எம்.அஞ்சலையின் புகைப்படம் மற்றும் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.

Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பேரில், திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் சில செய்தி ஆதாரங்கள் இதோ…

India Today Link l The Hindu Link l News18 Tamil Link

இந்த சூழலில் தன்னை பாஜக., வில் இருந்து நீக்கியதற்கு எதிராக, அஞ்சலை அண்ணாமலைக்கு, கடிதம் எழுதியதாக, சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகிறார்கள். ஆனால், இது முற்றிலும் தவறான தகவல்.

இதுபற்றி நாம் தமிழ்நாடு பாஜக ஊடகத் தொடர்பு நிர்வாகி எஸ்.எம்.பாலாஜியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், இதனை அண்ணாமலையின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், இதுபோன்ற எந்த கடிதமும் அஞ்சலையிடம் இருந்து வரவில்லை என்று அண்ணாமலை கூறியதாகவும் நமக்கு பதில் தெரிவித்தார்.

அடுத்தப்படியாக, நாம் தமிழ்நாடு DGP மற்றும் ADGP (Law and Order) அலுவலகங்களையும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இந்த கடிதம் ‘’அஞ்சலை எழுதியது கிடையாது, யாரோ வேண்டுமென்றே இத்தகைய போலியான கடிதத்தை தயாரித்து, சமூக ஊடகங்களில் விஷமத்தனமாக பகிர்ந்துள்ளனர்,’’ என்று தெரிவித்தனர்.

கூடுதல் ஆதாரத்திற்காக, மத்திய உளவுத்துறை (Intelligence Bureau) மண்டல அதிகாரி ஜீவா, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் சிஐடி.,(Special Units) மண்டல அதிகாரி குமார சுப்ரமணியம் ஆகியோரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

மேலும், அஞ்சலையின் வழக்கறிஞர் கருத்தைப் பெறவும் நாம் முயற்சித்து வருகிறோம். அவர் ஏதேனும் விளக்கம் அளித்தால், அதனையும் செய்தியாக வெளியிட தயாராக உள்ளோம்.

எனவே, அண்ணாமலையை கிண்டல் செய்யும் வகையில் யாரோ ஒருவர் இந்த போலியான கடிதத்தை தயாரித்துள்ளார்; ஆனால், அதனை உண்மை என நம்பி மற்றவர்கள் ஷேர் செய்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘அண்ணாமலைக்கு புளியந்தோப்பு அஞ்சலையின் மடல்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: False