
‘‘இந்து விரோத பாஜக கட்சிக்கு வாக்கு இல்லை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’இந்து விரோத பாஜக கட்சிக்கு வாக்கு இல்லை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட படம் உண்மையான என்று தகவல் தேடியபோது, கடந்த 2021ம் ஆண்டு ‘அகில பாரத இந்துசேனா’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்றின் லிங்க் கிடைத்தது.
இதன்படி, பாஜக ஆதரவாக வெளியிடப்பட்ட பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து, எடிட் செய்து, பாஜக.,வுக்கு எதிரான ஒன்று எனக் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘இந்து விரோத பாஜக கட்சிக்கு வாக்கு இல்லை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Fact Crescendo TeamResult: Altered
