‘கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘’ சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சிறுவன் முன்னாடி மதுபானத்தை கையில் வைத்திருக்கும் வந்தேறி ரஜினி 🔥🔥🔥’’, என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த தகவல் உண்மையா என்று நாம் குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இந்த படத்தில் ரஜினியுடன் நிற்கும் சிறுவன் நடிகர் ஜீவா என்பது தெரியவந்தது.
இதன்படி, கடந்த 2012ம் ஆண்டு நடிகர் ஜீவா அவரது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதேபோன்று, 2022ம் ஆண்டும் இதே புகைப்படத்தை பகிர்ந்து, ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதன்மூலமாக, நடிகர் ஜீவா அவரது சிறு வயதில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் இது என்று தெளிவாகிறது. மேலும், ரஜினி கையில் குளிர்பானம் மட்டுமே உள்ளது. எனவே, இந்த படத்தை எடுத்து, ரஜினி கையில் மதுபானம் உள்ளது போன்று எடிட் செய்துள்ளனர், என்று உறுதி செய்யப்படுகிறது.
எனவே, ‘ரஜினி கையில் மதுபானம்,’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:‘கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Fact Crescendo TeamResult: Altered