ஜனநாயகன் படம் பார்த்து விட்டு அழுத வைகோ என்று பரவும் வீடியோ உண்மையா?  

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘ஜனநாயகன் படம் பார்த்து விட்டு அழுத வைகோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ஜனநாயகன் படம் பார்த்துட்டு கண்ணீர் விட்டு அழுத வைகோ,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வைகோ அழுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ, என்று தெரியவந்தது. 

இதன்படி, வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளித்ததால் வைகோ அழுததாகக் கூறி கடந்த ஏப்ரல் 13, 2018 அன்று தினமலர் ஊடகம் மேற்கண்ட வீடியோவை அப்போது வெளியிட்டிருந்தது. இதனை எடுத்தே, ஜனநாயகன் படத்துடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள்.  

கூடுதல் செய்தி ஆதாரம்…

Polimer News l Puthiyathalaimurai

எனவே, குறிப்பிட்ட வீடியோ கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்று எனவும், இதற்கும் தற்போதைய ஜனநாயகன் பட ரிலீஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: ஜனநாயகன் படம் பார்த்து விட்டு அழுத வைகோ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply