கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஹைட்ரஜன் ரயில் மீது கல் வீசினார்களா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘ஹைட்ரஜன் ரயில் மீது கல் வீசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இந்தியாவின் அதிநவீன முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்ட சில காலங்களிலேயே, டெல்லியில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் கரப்பான் பூச்சி போன்ற தீவிரவாத சக்திகளால் இத்தகைய வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிக வேதனைக்குரியது, ​போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களையும் நாட்டின் வளர்ச்சியையும் சேதப்படுத்தும் இதுபோன்ற அழிவுச் சக்திகள் மீது மத்திய அரசு தயவுதாட்சணியமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன், இளைஞர்கள் ரயில் நிலையத்திற்குள் புகுந்து, கல் வீசி தாக்குவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது பீகார் மாநிலம் பாட்னாவில் ரயில் தாமதம் காரணமாக நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோ, என்று தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 14.06.2026 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள Patliputra Junction ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தாமதமாக வந்துள்ளது. இதனால், முக்கியமான போட்டித் தேர்வு ஒன்றை எழுத இயலாமல் போனதாகவும், தங்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதாகவும் கூறி இளைஞர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, கற்கள் வீசி, தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோவை எடுத்து, NEET போராட்டத்துடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

India TV News l Times of India l Republic World

அடுத்தப்படியாக, இந்தியாவின் முதல் Hydrogen ரயில் சேவை 17.07.2026 அன்றுதான் தொடங்கப்பட்டது. அதுவும், டெல்லியில் அல்ல; Jind-Sonipat வழித்தடத்தில்… இதுபற்றி ஏற்கனவே Northern Railway விளக்கம் அளித்துள்ளது. 

எனவே, ஒரு மாதத்திற்கும் முன்பாக நடைபெற்ற சம்பவத்தை எடுத்து Hydrogen ரயில் சேவை மற்றும் Neet போராட்டத்துடன் சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள் என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஹைட்ரஜன் ரயில் மீது கல் வீசினார்களா?

Fact Check By: Pankaj Iyer

Result: Misleading

Leave a Reply