பிராமணர் அல்லாத இந்துக்கள் ஹிஜாப் அணிய ஆதரவு என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பிராமணர் அல்லாத இந்துக்கள் ஹிஜாப் அணிய ஆதரவு; எச்.ராஜா, காயத்ரி ரகுராம் போன்ற பிராமணர்களும் ஆதரிக்க வேண்டுகிறேன்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

ஜூனியர் விகடன் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது உண்மையா என வாசகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் நாம் ஆய்வை மேற்கொண்டோம்.

உண்மை அறிவோம்:
கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து, கல்வி நிறுவனங்களுக்குள் வருவதை எதிர்த்து, இந்து அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதையொட்டி மாணவி ஒருவர் அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்ட வீடியோ வெளியாகி இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னணியில், ‘’ஹிஜாப் அணிய பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் ஆதரிக்கிறோம். காயத்ரி ரகுராம், எச்.ராஜா போன்ற பிராமணர்களும் ஹிஜாப்பை ஆதரிக்க வேண்டும்,’’ என்று அர்ஜூன் சம்பத் வேண்டுகோள் விடுத்தார் என்று கூறி, மேற்கண்ட நியூஸ் கார்டை பகிர்கின்றனர்.

உண்மையில், இந்த நியூஸ் கார்டு போலியான ஒன்றாகும். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று ஜூனியர் விகடன் ஊடகம் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதவிர, அர்ஜூன் சம்பத் ஹிஜாப் விவகாரம் பற்றி அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியை கூடுதல் ஆதாரத்திற்காக, கீழே இணைத்துள்ளோம்.

Vikatan News Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.  

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பிராமணர் அல்லாத இந்துக்கள் ஹிஜாப் அணிய ஆதரவு என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False