
‘‘கூட்டணி பற்றி பேசியதற்காக அண்ணன் ஈபிஎஸ்க்கு நன்றி,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’தோழமைக்கு நன்றி. அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அதில் பல சிக்கல்கள் இருந்ததால் அந்த முடிவை கைவிட்டோம். இரு கட்சிகளும் திராவிடக் கட்சிகளே என்பதால் இதில் பெரிய விஷயம் எதுவும் இல்லை. எனவே அண்ணன் மாண்புமிகு ஈபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஆட்சி அமைக்க உள்ள புதிய கட்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின். திமுக தலைவர்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது.

இதன்படி, உண்மையான நியூஸ் கார்டில், ‘’ தோழமைக்கு நன்றி. முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா, பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். மு.க.ஸ்டாலின். திமுக தலைவர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
கூடுதல் ஆதாரம் இதோ…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


