
பிரபல எழுத்தாளரான மறைந்த கி.ராஜநாராயணன் தன்னுடைய கோபாலபுரத்து கோயபல்ஸ் கிராமம் என்ற நாவலில் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜோசப் விஜய்யை விமர்சித்திருந்து எழுதியிருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
“கி.ராஜநாராயணன் எழுதிய கோபால புரத்து கோயபல்ஸ் கிராமம்” என்ற புத்தகத்தின் முகப்பு பக்கத்தின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெய்டு விபச்சார மீடியாவான கோபாலபுரத்து முன்களங்களின் சதிவேலைகள், பொய் பித்தலாட்டங்களை மையமா வச்சி கி.ரா அவர்கள் கோயபல்ஸ் கிராமம்ன்னு புதினம் ஒன்றை எழுதிருப்பாரு..
அதுல இப்படி வசனம் வரும்.. “இப்போ விக்கு மண்டையன் விடியா மூஞ்சி நீ முதல்வரா இருக்க.. தத்திப்பயல் உன்னை உலகமகா விஞ்ஞானி மாதிரி புகழ்றாங்க இந்தப் பத்திரிக்கை புழுத்திங்க.. டிவி தடியனுங்க.. நாளை இன்னொரு விக் மண்டையன் வருவான்.. அப்போ அவனைப் புகழ்ந்து உன்னைத் தூக்கிப் போட்டு மிதிப்பாங்க” அது உண்மையாகி விட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 1976ம் ஆண்டு கோபல்ல கிராமம் என்ற நாவலை எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ம் ஆண்டில் இவருக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. ஆனால் கோபாலபுரத்து கோயல்ஸ் கிராமம் என்று எந்த ஒரு புத்தகத்தையும் எழுதியதாக தரவுகள் இல்லை. அதுவும் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த 10வது நாளில் அதாவது, மே 17, 2021ல் கி.ராஜநாராயணன் காலமானார். அப்படி இருக்க மு.க.ஸ்டாலின், ஜோசப் விஜய் பற்றி எல்லாம் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.
இந்த புகைப்படத்தை அப்படியே கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். “கோபல்ல கிராமம்” என்ற புத்தகத்தின் முகப்பு படத்தை எடிட் செய்திருப்பது தெரிந்தது. எனவே, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெளிவானது.
கோபல்ல கிராமம் நாவலைப் படித்தது இல்லை என்பதால் அதன் மையக் கருத்து தொடர்பாக வௌியான புத்தக விமர்சனங்களைப் பார்த்தோம். அதில், “இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலத்தில் ஆங்கிலேயர் வருகை சமயத்தில் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்த்து ஒரு கிராமத்தையே உருவாக்கிய மக்களின் வாழ்க்கையை 137 வயதான மங்கத்தாயார் அம்மாள் கதை சொல்வதின் வழியே நாவல் நகர்கிறது” என்று தகவல் கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: vallamai.com I Archive
இலக்கிய ஆர்வலர்களிடம் பேசிய போது புத்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி இந்த புத்தகம் பேசவில்லை என்றனர். இதன் மூலம் 1970களில் வெளியான நாவலின் முகப்பு பக்கத்தை எடிட் செய்து, மு.க.ஸ்டாலின், ஜோசப் விஜய் ஆட்சி செய்த – செய்யும் முறை பற்றி கி.ராஜநாராயணன் தீர்க்கதரிசனமாக எழுதியது தற்போது நிறைவேறிவிட்டது என்று விஷமத்தனமான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோபல்ல கிராமம் என்று கி.ராஜநாராயணன் 1970களில் எழுதிய நாவல் புத்தகத்தின் படத்தை எடிட் செய்து கோபாலபுரத்து கோயபல்ஸ் கிராமம்’ என்ற நாவலில் விஜய் – மு.க.ஸ்டாலின் பற்றி கி.ராஜநாராயணன் தீர்க்கதரிசனம் போல எழுதியது தற்போது உண்மையானது என்று வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


