மீண்டும் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டணச் சலுகை அமலுக்கு வருகிறதா?

மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் கட்டண சலுகை வழங்கும் திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குமுதம் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதம் 58 வயதுக்கு மேற்பட்ட […]

Continue Reading

FactCheck: அமெரிக்காவில் மனைவிக்கு இதயத்தை தானம் கொடுத்துவிட்டு உயிர் விட்ட கணவன் இவரா?

அமெரிக்காவில் கணவர் ஒருவர் தன்னுடைய இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தன் இதயத்தைக் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவரைக் கட்டிப்பிடித்து அழும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம். இதய நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தன் இதயத்தை கொடுத்து […]

Continue Reading

கபில்தேவ் 2020ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு தற்போது வருந்தும் நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் மெலிந்து ஒடுங்கிப்போய்விட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கபில் தேவ் மருத்துவமனையில் இருக்கும் பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு இரக்கமற்றது என்பதும் எல்லாம் நிலையற்றது என்பதும் பல இடங்களில் அவ்வப்போது நினைவுக்கு வருமாறு வாழ்க்கை ஓடினாலும் […]

Continue Reading

Rapid Fact Check: திரிசங்கு மலர் என்று மீண்டும் பரவும் வதந்தி!

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று ஒரு மலரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலர் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்கு மலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை K Mahendran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 அக்டோபர் 30ம் […]

Continue Reading

1500 ஆண்டுகள் பழமையான ஒரிஜினல் பைபிள் எஸ்தர் சுருள் ஈரானில் கிடைத்ததா?

பைபிளில் இடம் பெற்ற எஸ்தர் என்ற நூலின் அசல் சுருள் பிரதி ஈரானில் கிடைத்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அந்தக் காலத்துப் பைபிள் சுருள் போன்று காட்டப்படுகிறது. நிலைத் தகவலில், “ஒரிஜினல் எஸ்தர் புத்தகம் சுருளி வடிவில் தங்கத்தினாலானது ஈரானில் கிடைத்துள்ளது 1500  வருட பழமை வாய்ந்தது…PURIM: The original book of Esther […]

Continue Reading

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி செய்கிறதா லாட்லி அறக்கட்டளை?

மகளின் திருமணச் செலவுக்கு பணம் இன்றி கவலைப்படுபவர்கள் லாட்லி அறக்கட்டளையைத் தொடர்புகொண்டால் ரூ.1 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “,, முக்கிய அறிவிப்பு.  ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம்  உங்கள் சொந்த விருப்பத்தின் […]

Continue Reading

வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் என்று பரவும் தஸ்லிமா நஸ்ரின் புகைப்படம்!

இந்தியாவுக்குள் புர்கா அணிந்தும், வெளிநாடு சென்றால் அரைகுறை ஆடையுடனும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா இருக்கிறார் என்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு புகைப்படங்களை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் உள்ளது. அந்த படத்திற்குள் “உள்நாட்டு கதீஜா” என்றும் அதற்குக் கீழ், “இந்தியாவுக்குள் மட்டும் புர்கா அணிந்து […]

Continue Reading

RAPID FACT CHECK: இந்த வருடத்தின் வெள்ளிக்கிழமை சிறப்பு என்று பகிரப்படும் வதந்தி!

இந்த ஆண்டின் வெள்ளிக்கிழமையின் சிறப்பு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வந்தது, அதே போன்று பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை வருகிறது, மார்ச் மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது, இப்படி டிசம்பர் மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது என்று ஒரு பதிவு சமூக […]

Continue Reading

ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று பாஜக-வின் நாராயணன் கூறினாரா?

ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சத்யம் டிவி வெளியிட்ட யூடியூப் வீடியோ முகப்பை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்று ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் பாஜக தலைவரின் திமிர் பேச்சு” என்று இருந்தது. அதற்கு […]

Continue Reading

தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டதா?

தமிழ்நாடு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆகக் குறைப்பு அமல்..! 05-01-2022 முதல் அரசாணை வெளியீடு” என்று இருந்தது. இந்த பதிவை பசும்பொன் தாரா என்ற […]

Continue Reading

FACT CHECK: நல்லாட்சி மாநிலங்கள்: மகாராஷ்டிரா 2ம் இடம் என தினத்தந்தி தலைப்புச் செய்தி வெளியிட்டது ஏன்?

நல்லாட்சி வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த மகாராஷ்டிராவை கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு, முதல் இடம் வாங்கிய தமிழ்நாட்டை சிறிய எழுத்தில் போட்டுள்ளது தினத்தந்தி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தினத்தந்தி முதல் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் உடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினத்தந்தியில் “மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் இந்தியாவிலேயே மராட்டியம் 2-ம் இடம். […]

Continue Reading

FACT CHECK: 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிசய பிப்ரவரி 2022 என்று பரவும் வதந்தி!

வருகிற 2022 பிப்ரவரி மாதம் அதிசய மாதம் என்றும் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக் கூடிய சிறப்பான மாதம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போட்டோ பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிசய மாதம். வரும் பிப்ரவரி உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் வராது. ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 […]

Continue Reading

FACT CHECK: பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது என்று பரவும் வதந்தி!

தொழிற்சாலையில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொழிற்சாலை ஒன்றில் பிளாஸ்டிக்கை உருக்கி, சிறு சிறு துண்டுகளாக மாற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் விதம். அரிசி வாங்கும் போது கவனமாக இருக்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அரிசியில் இப்போது பிளாஸ்டிக் அரிசியும் கலப்படம் பன்றானுக மக்களே அரிசி […]

Continue Reading

FACT CHECK: புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

புதிய வகை கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு சற்றுமுன் வந்த தகவல் புதிய வகை.!! கொரோனா பரவலால் […]

Continue Reading

FACT CHECK: சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் வழங்கியதா இலங்கை?

அசோக வனத்தில் சீதை அமர்ந்து தவம் செய்த பாறையை இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விமானத்தில் இருந்து சிலர் அரசு மரியாதையுடன் நினைவு பரிசு போன்று இருக்கும் ஒன்றை எடுத்து வருகின்றனர். அதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய […]

Continue Reading

FACT CHECK: மது வாங்குபவர்களுக்கு அரசு மானியம் ரத்து செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறினாரா?

மதுவை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரத்தன் டாடா புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் […]

Continue Reading

FACT CHECK: கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குர்-ஆன் இதுவா?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அழியாத புனித குர்ஆன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உப்பு படிந்தது போன்ற புத்தகம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1912 ல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட புனித அல்-குர்ஆன்.100 ஆண்டு தாண்டியும் அழியாமல் இருக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Ameer […]

Continue Reading

FACT CHECK: அரிசியில் கலப்படம் செய்த வட இந்தியர்கள்?- வீடியோ செய்தி உண்மையா?

அரிசியில் திட்டமிட்டு கலப்படம் செய்யும் வட இந்தியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அரிசி ஆலை ஒன்றில் இளைஞர்கள் அரிசியில் ஏதோ ஒன்றை ஊற்றிக் கலக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் மொழி என்ன என்று அறிய முடியவில்லை. நிலைத் தகவலில், “வட இந்தியர்களின் திட்டமிட்ட கொடூர செயல் !! அரிசியை சமைத்து சாப்பிடும் மக்களின் […]

Continue Reading

FACT CHECK: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடம் என்று பரவும் தவறான வீடியோ!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வீடியோவை பார்த்தோம். இளைஞர் ஒருவர் மயக்கம் காரணமாக படியில் வந்து அமர்ந்து, பின்னர் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சிசிடிவி காட்சி அது; சமீபத்தில் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் […]

Continue Reading

FACT CHECK: முகமது நபியை தவறாக வரைந்த ஸ்வீடன் கார்ட்டூனிஸ்ட் கார் விபத்தா?

முகமது நபியை சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூனாக வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த லார்ஸ் வில்க்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive டிரக் ஒன்றில் கீழ் கார் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கொடூரமானது. ஸ்வீடன் மூதேவியின் லார்ஸ் வில்க்ஸ் மரணம் […]

Continue Reading

Rapid FactCheck: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றி வலுக்கட்டாயமாக பகிரப்படும் வதந்தி…

‘’வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போனது அம்பலமானதால் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோபம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FACT CHECK: ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற பெண்- உண்மையா?

தென்னாப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்ற பெண் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் செய்தி ஊடகத்தில், “ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் – சாதனையா? வலியா?” என்ற தலைப்பில் செய்தி ஒன்று ஒளிபரப்பாகி இருந்தது. ஃபேஸ்புக்கில் 2021 செப்டம்பர் 23ம் தேதி அது பதிவிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில், “ஆப்ரிக்காவில் […]

Continue Reading

Rapid FactCheck: இந்தியா – இலங்கை கலாசார தூதராக பாடகி யோஹானி நியமிக்கப்பட்டதாக பரவும் வதந்தி…

‘’பாடகி யோஹானி இந்தியா – இலங்கை கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவல் பற்றி ஏற்கனவே நமது இலங்கைப் பிரிவினர் ஆய்வு செய்து, விரிவான செய்தியை வெளியிட்டுள்ளனர். இதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் பாடகி யோஹானியை பாராட்டி ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறது. இதனை வைத்தே பலரும், […]

Continue Reading

FactCheck: இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூ தயாரிப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் செய்ததா?

‘’இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூக்களை இஸ்ரேலில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மோசடி செய்துள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இதுபற்றி நாம் தகவல் தேடியபோது, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று ABP News ஊடகம் வெளியிட்ட செய்தி […]

Continue Reading

FactCheck: பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

‘’பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்த்தார்,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண நேரிட்டது. Facebook Claim Link I Archived […]

Continue Reading

Rapid FactCheck: வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகிறதா?- வைரல் வதந்தியால் சர்ச்சை…

‘’வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:முக்கிய அறிவிப்பு..!!! ********* *********** வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால்களுக்கு நாளை முதல் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது…!!! நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு கால்களும் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படும்…!!! வாட்ஸ் அப்,பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்,மற்றும் அனைத்து சமூக வளைதளங்களும் கண்காணிக்கப்படும்…!!! உங்களது செல்போன் இணைப்பு மத்திய அரசின் தகவல் தொடர்புடன் […]

Continue Reading

FactCheck: நயினார் நாகேந்திரன் பற்றி துரைமுருகன் கூறியதாகப் பரவும் செய்தி உண்மையா?

‘’நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக.,வினர் பற்றி துரைமுருகன் கேலிப் பேச்சு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனைப் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FactCheck: ஆற்றில் குளித்ததற்காக தலித் பெண்ணை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினரா?

‘’ஆற்றில் குளித்த காரணத்தால் தலித் பெண்ணை ஆடை அவிழ்த்து கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ் நபர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் வீடியோ தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FactCheck: சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு கூறவில்லை!

‘’சமூக இடைவெளியால் சத்துணவு முட்டை தர முடியாது என்று திமுக அரசு தகவல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிர்வதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த ஸ்கிரின்ஷாட்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FactCheck: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும் என்று அண்ணாமலை கூறினாரா?

‘’விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் கேஸ் விலை குறையும்,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுபற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை பலரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link Archived Link  அதில், சன் நியூஸ் லோகோவுடன், ‘’கேஸ் விலை குறைய வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் […]

Continue Reading

FactCheck: தென்னிந்திய நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தியால் பரபரப்பு!

‘’நடிகர் சித்தார்த் இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்த ஸ்கிரின்ஷாட்டை, +919049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் பலரும் இந்த தகவலை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link  Archived Link  Twitter Claim Link Archived Link  உண்மை அறிவோம்:நடிகர் சித்தார்த், தமிழ், […]

Continue Reading

FACT CHECK: மோசஸ் காலத்தில் செங்கடலில் மூழ்கிய குதிரை வண்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டதா?

பைபிளில் இடம் பெற்ற மோசஸ் கதையில் வரும் எகிப்து மன்னனின் குதிரைப் படை வண்டி செங்கடலில் கிடைத்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கடலில் சிதைந்து போன அந்தக் காலத்து குதிரை அல்லது மாட்டு வண்டி போன்று இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தில், “மோசேயின் காலத்தில் செங்கடல் பிளந்து பாரோவனின் படைகளை கடலுக்குள் […]

Continue Reading

FACT CHECK: பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்க விட்டனரா தாலிபான்கள்?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தாலிபான்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஹெலிகாப்டரில் ஒருவர் தொங்கிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தலிபான்கள்.! ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரில் கீழ் கயிற்றில் தொங்கிய உடலுடன் பறந்த தலிபான்கள்” […]

Continue Reading

FactCheck: பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்?

‘’பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடிப் பிடித்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. Tweet Link I Archived […]

Continue Reading

FACT CHECK: சுகன்யா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தினால் ரூ.6 லட்சம் கிடைக்குமா?

எஸ்.பி.ஐ வங்கியில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் கணக்கு தொடங்கி ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதம், 14 ஆண்டுகள் செலுத்தினால் 21 வயதாகும் போது ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “Thanks to […]

Continue Reading

FactCheck: துக்ளக் பத்திரிகை பிராமணர்கள் தவிர்த்த மற்ற சாதியினரை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’துக்ளக் பத்திரிகை பிராமணர் இல்லாதவர்களை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை சிலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FACT CHECK: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனம் என்று பகிரப்படும் பாகிஸ்தான் வீடியோ!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனமாடிக் கொண்டாடினார்கள் என்று ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தாலிபான்கள் போன்று தோற்றம் அளிக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழ் பாட்டுக்கு ஆடுவது போல ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான் தீவிரவாதிகள் தமிழ் பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்” என்று […]

Continue Reading

FactCheck: மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி கூறினாரா?

‘’மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:மதன் ரவிச்சந்திரன் என்பவர் தொடர்ச்சியாக […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் குடிபோதையில் பிடிபட்ட ராகுல் காந்தி?- பெயர் குழப்பத்தால் சர்ச்சை…

‘’குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குடிபோதையில் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். இவர்கள் அனைவருமே கதிர் செய்தி இணையதளம் வெளியிட்ட நியூஸ் கார்டை அடிப்படையாக […]

Continue Reading

FactCheck: கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

‘’கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நகைச்சுவைக்காக பகிரப்பட்டுள்ள இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆபாசமாக வீடியோ கால் செய்த விவகாரம் காரணமாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், அவரது பதவியை ராஜினாமா செய்தார். […]

Continue Reading

FACT CHECK: ஆப்கானிஸ்தானில் மகளின் வாழ்க்கைக்காக ஓடும் தந்தை என்று பகிரப்படும் ஈராக் புகைப்படம்!

தன் மகளின் வாழ்வை காக்க தூக்கிக்கொண்டு ஓடும் ஆப்கானிஸ்தான் தந்தை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போர் சூழலில் மகளை தூக்கிக்கொண்டு ஓடும் தந்தை ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன் மகளின் வாழ்வை காக்க தூக்கி கொண்டு ஓடும் ஒரு ஆப்கன் தந்தை😭😭 மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்…” என்று […]

Continue Reading

FACT CHECK: ஆப்கானிஸ்தானில் பெண் விமானியை தாலிபான்கள் கொலை செய்தார்களா?

ஆப்கானிஸ்தான் விமானப்படை பெண் விமானியை தாலிபான்கள் கல்லால் அடித்து கொலை செய்தார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆப்கான் விமானப்படையின் பெண் விமானி சஃபியா ஃபிரோஸி. தாலி பன்களால் கல்லால் அடித்து கொலை.. அவ்வளவு தான் அவிங்க புத்தி” என்று […]

Continue Reading

FactCheck: அர்ச்சகர் பயிற்சி மையத்தின் அவலநிலை?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

‘’திமுக ஆட்சியில் அர்க்கர் பயிற்சி நிலையத்தின் அவல நிலை ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்படி, பாஜக.,வைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர், ட்விட்டரில், தமிழக அரசின் லெவலே தனிதான் போங்க, என்று குறிப்பிட்டு, மதுரையில் உள்ள அர்ச்சகர் பயிற்சி […]

Continue Reading

FactCheck: தமிழ் மொழிக்கு மட்டுமே தேசிய மொழி தகுதி உள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டதா?

‘’இந்தியாவுக்கு என தேசிய மொழி இருந்தால், அது தமிழாக மட்டுமே இருக்க வேண்டும்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த டெம்ப்ளேட்டை வாசகர் ஒருவர் +919049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டார். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FACT CHECK: சதாம் உசேன் உடல் 15 ஆண்டுகளாக அழியாமல் உள்ளதா?

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் உடல் அழியாமல் இன்றும் உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் உடல் வெளியே எடுக்கப்படுவது போன்ற காட்சி பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மேல் “சதாம் ஹுசேன் உடல் அழியவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் ஒருவர் பேசும் ஒலி கேட்கிறது. “15 […]

Continue Reading

FactCheck: ஜனவரி 15 சுதந்திர நாள் என்று முதலமைச்சர் உரையின்போது மு.க.ஸ்டாலின் பேசினாரா?

‘’ஜனவரி 15 சுதந்திர நாள் என்று உளறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அவர் ஜனவரி 15 சுதந்திர நாள் என்று உளறிவிட்டதாகக் கூறி, இந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற […]

Continue Reading

FACT CHECK: ஆப்கனில் பெண்ணை சுட்டுக் கொன்ற தாலிபான்கள் என்று பரவும் பழைய வீடியோ!

ஆப்கானிஸ்தால் தாலிபான்கள் பெண் ஒருவரை நடு ரோட்டில் சுட்டுக் கொன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரை கைகள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் முட்டி போட வைக்கின்றனர். சுற்றிலும் கையில் இயந்திரத் துப்பாக்கி வைத்துக் கொண்டு ஆண்கள் பலரும் நிற்கின்றனர். அரபி போன்ற மொழியில் பேசுகின்றனர். கடைசியில் அந்த பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை […]

Continue Reading

FactCheck: ஸ்ரீநகரில் தீவிரவாதியை போலீஸ் கைது செய்த வீடியோ- உண்மை என்ன?

ஸ்ரீநகரில் தீவிரவாதியை சுற்றி வளைத்துக் கைது செய்த போலீசார், என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link தீவிரவாதியை சுற்றி வளைத்து ஸ்ரீநகரில் தைரியமாக பிடித்த போலீஸ் எனக் கூறி இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதனை ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடினோம். அப்போது, […]

Continue Reading

FactCheck: அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்?- வைரல் வீடியோவின் முழு விவரம்!

‘’அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோ, அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்று கூறி பலரும் கடந்த 2018 முதலே ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெறும் நடிகர்களை பார்த்தால், ஆசிய நாட்டவர் போல முகச்சாயல் உள்ளது. ஆனால், அவர்களை அமெரிக்கர்கள் […]

Continue Reading

FactCheck: ஒரு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி?- ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை என பகிரப்படும் வதந்தி…

‘’ஒரு வீட்டில் கணவன் அல்லது மனைவி என யாரேனும் ஒருவர் மட்டுமே இனி அரசுப் பணியில் நீடிக்க முடியும்- திமுக அதிரடி நடவடிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே ( ) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் […]

Continue Reading