ஊழல் வழக்கில் தண்டனை; ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் நிரந்தர பொதுச் செயலாளராக இனி இருக்க முடியாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
அதிமுக.,வின் புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, அவரது தரப்பினருக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கு வரும் நோக்கில், முன்பு நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா பெயரை அதில் இருந்து நீக்கினார் என்றும், ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்பதால் அவர் பெயரை நீக்கினேன் என்றும் கூறியதாக, மேற்கண்ட வகையில் சிலர் செய்தி பரப்பி வருகின்றனர்.

ஆனால், சன் நியூஸ் இந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். சன் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, சன் நியூஸ் வெளியிட்ட செய்தியை எடுத்து, வேண்டுமென்றே சிலர் எடிட் செய்து, மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஊழல் வழக்கில் தண்டனை; ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered