
‘‘முதல் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’முதல் தேசிய விருது. பாடகர்களுக்கு தேசிய விருது இல்லாமல் இருந்த நிலையில், அந்த காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டு, 16 வயதினிலே படத்தில் ‘செந்தூரப்பூவே…‘ பாடலுக்கு எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவல், என்று தெரியவந்தது.

இதன்படி, 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தொடக்கத்தில், சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் போன்ற பிரிவுகளுக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் 1967-68ம் ஆண்டில் இருந்தே, சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் போன்ற பிரிவுகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

இதில், 1967ம் ஆண்டு முதன்முதலாக பின்னணி பாடகர் (ஆண்கள்) பிரிவில் Mahendra Kapoor தேசிய விருது பெற்றுள்ளார். அடுத்ததாக, 1968ம் ஆண்டில்தான் பின்னணி பாடகர் பிரிவில் பெண்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டது. அப்போது, P. Susheela முதலில் இந்த விருதை பெற்றார்.

அதேசமயம், S Janaki கடந்த 1978ம் ஆண்டுதான் 16 வயதினிலே படத்தில் பாடல் பாடியதற்காக, தேசிய விருது பெற்றார்.

இதன்மூலமாக, முதலில் தேசிய விருது பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி என்ற தகவல், தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


