‘’இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’என் மனைவிக்கு எனக்கு பாலமாக என் மகள் தான் இருக்கறாள், என் மகளிடம் நான் என் மனைவியை கைவிட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே என்று சொல்லி தான் வளர்த்தேன் – இயக்குனர் மிஷ்கின்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இதுபற்றி நாம் நேரடியாக இயக்குனர் மிஷ்கின் தரப்பை தொடர்பு கொண்டு விசாரித்தோம். ‘’இது தவறான தகவல். இந்த புகைப்படத்தில் இருப்பவர் ஒரு தொகுப்பாளினி,’’ என்று விளக்கம் அளித்தனர்.

அடுத்தப்படியாக, நாம் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, என ஆதாரம் தேடினோம். அப்போது, subha_rajendren என்பவர் ‘கடந்த 2024 பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம்,’ என்று கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.


Subha Rajendren lnstagram Post l Archived Link

எனவே, இயக்குனர் மிஷ்கின் அவரது மகளுடன் நிற்கும் புகைப்படம் என்று கூறி, தவறான தகவல் பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   இயக்குனர் மிஷ்கின் மற்றும் அவரது மகளின் புகைப்படம்!
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE