கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் தீபக் சதே பாடிய பாடல் என்று பரவும் வீடியோ!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி தீபக் சதே கடைசியாக பாடிய பாடல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த பைலட் கேப்டன் தீபக் சதே போன்று தோற்றம் அளிக்கும் ஒருவர் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேப்டன் தீபக் சதே அவர்கள், தன்னை கொடுத்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார். அவர் கடைசியில் நமக்காக விட்டுச் சென்றது அவர் பாடிய பாடல். ஓம் சாந்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை Laser Gopi என்பவர் 2020 ஆகஸ்ட் 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

“வீடியோவில் வெஸ்டர்ன் நேவல் கமாண்ட் பொன்விழா ஆண்டு” என்று இருப்பதைக் காண முடிந்தது. கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு ஏர் இந்தியாவில் பணியாற்றி வந்தார். அப்படி இருக்கும்போது எப்படி அவர் இந்தியக் கடற்படை விழாவில் பங்கேற்றுப் பாடுவார் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த வீடியோ தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்தியக் கடற்படை வைஸ் அட்மிரல் கடற்படை அதிகாரிகள் மத்தியில் பாடினார் என்று கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருந்தது. வீடியோவைப் பார்த்தபோது, நிகழ்ச்சி தொகுப்பாளர், “அடுத்து பாட வருகிறார் வைஸ் அட்மிரல் கிரிஷ் லூத்ரா” என்று கூற, அவர் மேடைக்கு வந்து இந்தி பாடல் ஒன்றைப் பாடினார்.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2F557028167678453%2Fvideos%2F423936651692408%2F&show_text=0&width=560″ width=”560″ height=”308″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowTransparency=”true” allowFullScreen=”true”></iframe>

Archived Link

இந்த வீடியோவில் உள்ள கிரிஷ் லூத்ரா, வெஸ்டர்ன் நேவல் கமாண்ட், கோல்டன் ஜூப்லி என கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது கிரிஷ் லூத்ரா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. 

இதன் மூலம், பழைய வீடியோவை எடுத்து, கடற்படை வைஸ் அட்மிரல் பெயர் சொல்லும் பகுதியை அகற்றிவிட்டு, கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் பாடிய பாடல் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் தீபக் சதே பாடிய பாடல் என்று பரவும் வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False