சீமான் விசில் சின்னத்தில் வாக்கு செலுத்தினாரா?  

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘விசில் சின்னத்தில் வாக்கு செலுத்திய சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ சீமான் அவசரத்தில் தனது கட்சிக்கு வாக்கு அளிக்காமல், பட்டனை மாற்றி அமுக்கி ‘’விசில்’’ சின்னத்தில் வாக்கு செலுத்திவிட்டார்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Claim Link 2 l Archived Link        

புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது புதிய தலைமுறை பெயரில் பரவும் போலியான செய்தி, என்று தெரியவந்தது. 

இதன்படி, உண்மையான நியூஸ் கார்டில், ‘’ நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை,’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது.  

Puthiyathalaimurai Link 1 l Link 2 

இதனை வேண்டுமென்றே எடிட் செய்து, அரசியல் உள்நோக்கத்துடன் வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: சீமான் விசில் சின்னத்தில் வாக்கு செலுத்தினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply