அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறாரா?

உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1OneIndia Tamil LinkArchived Link 2

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இணைத்துள்ளனர்.

இதே தகவலை தினகரன், ஏசியாநெட் தமிழ், நியூஸ்டிஎம் உள்ளிட்ட பல்வேறு செய்தி இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Asianet Tamil News LinkArchived Link
Newstm LinkArchived Link
Dinakaran News LinkArchived Link
Dailyhunt News Link 1Archived Link
Dailyhunt News Link 2Archived Link 

மேற்கண்ட செய்தியை உண்மை என நம்பி, ஃபேஸ்புக் வாசகர்கள் பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அலங்காநல்லூர் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் பிரபலமானதாகும். இதனை பார்க்க வெளிநாடுகளில் இருந்தும் கூட பார்வையாளர்கள் வருவதுண்டு. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் வீடியோவை கீழே இணைத்துள்ளோம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க, மதுரையை அடுத்த அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடினும், இந்திய பிரதமர் மோடியும் வர உள்ளதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இதில் உண்மையில்லை. இதுபற்றி தகவல் பரவியதும் உடனடியாக மதுரை திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இதனை மறுத்துவிட்டார். 

HindustanTimes Link

இதுதவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்து, இது தவறான தகவல் என நிரூபித்துள்ளன. 

TOI News LinkNewsNation Story Link

பிரதமர் அலுவலகமே இதனை மறுத்துள்ளது. மேலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்திப் பிரிவு அலுவலகம் PIB இதுபற்றி மறுப்பு தெரிவித்து, ட்வீட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. 

Archived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) சமீபத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரம் வந்ததை தொடர்ந்து, மதுரை ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் வருவதாக யாரோ வதந்தி கிளப்பிவிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி செய்தி வெளியிட தொடங்கியுள்ளனர்.
2) பிரதமர் அலுவலகம், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்திப் பிரிவு அலுவலகம் ஆகியவை இதனை மறுத்துள்ளன. 3) ஒருவேளை இப்படி ஒரு திட்டம் இருந்தால் மத்திய அரசே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும். அதுவரையிலும் யாரும் இத்தகைய வதந்திகளை நம்ப தேவையில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •