
‘’பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுகவினர் பிச்சை எடுக்கும் நிலை வரும்,’’ என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் போலியாக உருவாக்கப்பட்டதாகும். இதுதொடர்பாக, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@ThanthiTV) 29.02.2020 அன்று வெளியான நியூஸ் கார்டை தேடிக் கண்டுபிடித்தோம்.
Thanthi TV Facebook Post Link | Archived Link |
எனவே, மேற்கண்ட தந்தி டிவி நியூஸ் கார்டை எடுத்து, எடிட் செய்து வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
ஏற்கனவே இப்படித்தான் ராஜேந்திர பாலாஜி பற்றி சமீபத்தில் ஒரு போலி நியூஸ் கார்டு வெளியானது. அதில், ‘மார்வாடிகள் இல்லை என்றால் தமிழர்கள் பிச்சை எடுக்க நேரிடும்,’ என்று குறிப்பிட்டிருந்தனர். அதுவும் போலியான செய்திதான். அதனை பற்றியும் உண்மை கண்டறிந்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருக்கிறோம். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்வோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் அரசியல் உள்நோக்கத்துடன் தவறான தகவல் பகிர்ந்துள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
