ஜனநாயகன் படத்தை லீக் செய்த நபர் கைது என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தமிழகம் | Tamil Nadu

‘‘ஜனநாயகன் படத்தை லீக் செய்த நபர் கைது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஜனநாயகன் படத்தை லீக் செய்த திருட்டு பையன் இன்று கைது செய்யப்பட்டன்
இனி இவ்வறு குற்றம் செய்தால் இனி கடுமையான  தண்டனை வழங்க படவேண்டும் ✅,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது. 

இதன்படி கடந்த 2019ம் ஆண்டு கோவையில் 7 வயது சிறுமியை வன்கொடுமை செய்து, கொன்ற சந்தோஷ்குமார் என்பவருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்போது, சந்தோஷ்குமாரை போலீசார் அழைத்துச் சென்ற புகைப்படம்தான் இது. இதனை எடிட் செய்து, தவறான முகம் சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள். 

இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களிலும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது. 

The News Minute l Timesofindia l NDTV l New Indian Express

அதேசமயம், ஜனநாயகன் படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான விவகாரத்தில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அதற்கும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

Thanthi TV l Vikatan 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Result Stamp

Title: ஜனநாயகன் படத்தை லீக் செய்த நபர் கைது என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

Written By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply