‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் சர்ச்சை கருத்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், குற்றவாளிகளுக்கு துணை போகும் அதிமுக, என்று கூறியுள்ளனர். அதன் கீழே பகிரப்பட்டுள்ள லோகோ தந்திடிவி லோகோவுடன் உள்ளது. அதில், ‘’பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண் பிள்ளைகளை சரியாக வளர்க்காத பெற்றோர்தான் முழுப் பொறுப்பு – மாஃபா பாண்டியராஜன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாகும். இதுபற்றி நிறைய அரசியல் காரணங்களும் கூறப்பட்டு வரும் சூழலில், இந்த விவகாரத்தில் அதிமுக.,வைச் சேர்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேற்கண்ட வகையில் பேசியதாகக் கூறி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து, சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட தகவல்தான் மேலே நாம் கண்டதும். உண்மையில், மாஃபா பாண்டியராஜன், அப்படி பேசினாரா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.

இதுபற்றி நாம் முதலில், தந்தி டிவி தரப்பில் தொடர்புகொண்டு, ஆசிரியர் குழுவில் விளக்கம் கேட்டோம். தகவலை பார்வையிட்ட அவர்கள், ‘’இப்படி எந்த செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் தயாரிக்கப்பட்ட போலிச் செய்தி,’’ என்று தெரிவித்தனர்.

இதற்கடுத்தப்படியாக, மூத்த பத்திரிகையாள நண்பர்களை விசாரித்தபோது, ‘’இப்படி மாஃபா பாண்டியராஜன் பேசியிருந்தால், அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இப்படி எந்த செய்தியும் நாங்கள் இதுவரை காணவில்லை. வெளியிட்டதும் இல்லை,’’ என்றனர்.

இதையடுத்து, இறுதியாக, அதிமுக ஐடி பிரிவில் உள்ள நண்பர்களிடம் விளக்கம் கேட்டோம். அவர்களும், ‘’இது போலியான செய்திதான். இப்படி எங்கேயும் அவர் பேசவில்லை,’’ என்றனர்.

எனவே, மாஃபா பாண்டியராஜன் பற்றி, சட்டமன்ற தேர்தல் 2021 மையமாக வைத்துச் சிலர் இப்படி தவறான தகவல் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் கூறியதாகப் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer

Result: False