
‘‘சோஃபா கட்சி என்று உதயநிதி ஸ்டாலின் பற்றி கிண்டல் செய்த விகடன் ஊடகம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’4 SEATER SOFA. MUCH BIGGER NOW. 5 SEATER SOFA.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் செந்தில் பாலாஜி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அமர்ந்துள்ளது போன்ற கார்ட்டூன் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்பட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்து, பகிரப்படும் தகவல், என்று தெரியவந்தது.
இதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜூன் 16, 2026 அன்று தவெக ஆட்சியை கிண்டல் செய்து, X வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுபற்றி விகடன் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டது. ஆனால், இதில் திமுக பற்றி எந்த கருத்தும் இடம்பெறவில்லை.

இந்த படத்தை எடிட் செய்து, வேண்டுமென்றே தவறான தகவல் பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


