
‘‘பெண்களிடம் சில்மிஷம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்த ஆந்திர போலீசார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ பொண்ணுங்க கிட்ட இனி சில்மிஷம் பண்ணுவீங்க!
ஆந்திர போலீசார் கல்லூரி பெண்களிடம் சில்மிஷம் செய்தவர்களுக்கு தக்க பாடம் சொல்லிக் கொடுத்த வீடியோ வைரல்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மூன்று பேரை சாலையில் அமர வைத்து, போலீசார் லத்தியால் தாக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்பட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது பாலியல் சீண்டல் புகார் தொடர்பான செய்தி இல்லை, என்று தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2025ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் (Guntur Urban Police District) உள்ள Tenali I Town Police Station எல்லைக்கு உள்பட்ட Lingaraju Centre என்ற இடத்தில் மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட 3 பேரும் கஞ்சா பயன்படுத்தியதாகவும், அதனை தட்டிக் கேட்ட போலீசாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதன்பேரில் அவர்களுக்கு போலீசார் இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கியுள்ளனர். இதற்கும், Eve Teasing புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதுதொடர்பாக, போலீஸ் நிலையத்திலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். பல்வேறு ஊடகங்களிலும் ஏற்கனவே இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
India Today l Deccan Herald l New Indian Express
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் நம்பகமானது இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


