மாமரம் என்று கூறி அத்தி மரத்தின் புகைப்படத்தை பகிரும் விநோதம்!

சமூகம் மருத்துவம் I Medical

‘’காய்த்து தொங்கும் மாமரம்,’’ என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

அக்டோபர் 7, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அத்தி மரம் போன்ற மரம் ஒன்றில் காய்த்து தொங்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இயற்கையின் அதியசம் ! மாமரத்தில் மாங்காய்கள் இதுமாதரி காய்த்து இருப்பதை இதற்குமுன் எங்காவது பார்த்து இருக்கீங்களா !?,’’ என எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பொதுவாக மாமரம் எப்படியிருக்கும் என்பது எல்லோருக்குமே பரவலாக தெரியும். ஆனாலும், இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்தவர், இதனை அறியாமல் பச்சைக்குழந்தை போல, மாமரம் என்று கூறியுள்ளார்.

மாமரம் காய்த்து தொங்கினால் கிளைகளில் இருந்துதான் காய்க்குமே தவிர, மரத்தின் முதன்மை தண்டில் இருந்து காய்க்காது. அவ்வாறு காய்க்கும் மரங்களில் அத்தி மரம் முதன்மையானது. முதன்மை தண்டில்தான் நிறைய அத்திப்பழங்கள் காய்க்கும்.

அத்தி மரத்தின் புகைப்படத்தையே நமது வாசகரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். 

மீண்டும் ஒருமுறை சந்தேகத்திற்காக, ஒரு அத்தி மரத்தின் காய்கள் சற்று தெளிவாக தெரியும்படி கீழே சில புகைப்படங்களை இணைத்துள்ளோம். 

Image Courtesy PK-Photography 

எனவே, மாமரத்திற்கும், அத்தி மரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நமது வாசகர் தவறான தகவலை பரப்பியுள்ளார் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049053770 என்ற எமது வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:மாமரம் என்று கூறி அத்தி மரத்தின் புகைப்படத்தை பகிரும் விநோதம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •