ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி இதுவா? 

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *💫ஈரான் அதிபரின்* 

*அந்த கடைசி நிமிடங்கள்*

🥹
🥹

,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ தொடர்பாக, நாம் தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2022ம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற ஒரு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான வீடியோ என்று விவரம் கிடைத்தது. 

அந்நாட்டின் Gudauri மலைப்பகுதியில் கடந்த ஜூலை 29, 2022 அன்று பாராகிளைடிங் செய்து காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை மீட்கச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். 

Newsflare Link l Georgia Today Link l Azerbaycan24 Link 

இந்த வீடியோவை எடுத்தே, ஈரான் அதிபர் Ebrahim Raisi சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று கூறி சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி இதுவா?

Written By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply