‘’ இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Facebook Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் கூகுள் உதவியுடன் இதில் வரும் காட்சி ஒன்றை எடுத்து, ரிவஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமக்கு இது இந்தியாவில் நடந்தது அல்ல என்றும், லெபனான் நாட்டில் உள்ள (Beddawi School, Tripoli, North Lebanon) கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த மோதல் காட்சி என்றும் தெரியவந்தது.

News Link 1 l News Link 2

நமது ஆங்கில மொழிப் பிரிவினரும் இதுபற்றி ஃபேக்ட்செக் செய்துள்ளனர். அந்த லிங்க் கூடுதல் ஆதாரத்திற்காகக் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Fact Crescendo English Link

எனவே, லெபனான் நாட்டில் நடந்த மோதல் காட்சி ஒன்றை எடுத்து, இந்தியாவில் நடைபெற்றதாகக் கூறி, முஸ்லீம்களின் அராஜகத்தைக் கட்டுப்படுத்த பொது சிவில் சட்டம் தேவை என்றும் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என நமக்குச் சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False