இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததா ஐக்கிய அரபு அமீரகம்?

அரசியல் இந்தியா உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

இந்த பதிவின் கமெண்ட்களில், இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததைப் போன்று பலர் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவதைப் போல, இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு, ஐக்கிய அரபு அமீரகம் தடை விதிக்கவில்லை. சில நாட்கள் முன்பாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக, எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைப்பதாக, இந்திய அரசு அறிவித்தது.

voanews.com link I cnbc.com link

இதையடுத்து, கையிருப்பில் உள்ள கோதுமையை (உள்நாட்டில் விளைவித்த மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை) போன்றவற்றை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய தடை விதிக்கவில்லை. இதனை பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். இந்திய வகை கோதுமையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த பின், தனது தேவை போக, மற்ற நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீகரம் ஏற்றுமதி செய்கிறது. அதற்குத்தான் 4 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Reuters.com Link I Business Standard Link 

அதேசமயம், இந்தியா தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்நாட்டு தேவைகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்து வருகிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

The National News Link

எனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் இதர கோதுமை சார்ந்த பொருட்களை, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது; இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய தடை எதுவும் விதிக்கவில்லை. அதேசமயம், சர்வதேச சூழல் காரணமாக, கோதுமை ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ள இந்திய அரசு, தேவையின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை மற்றும் கோதுமை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததா ஐக்கிய அரபு அமீரகம்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply