அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தவறு என்று பசவராஜ் பொம்மை கூறினாரா?
‘’ அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தவறு’’ என்று பசவராஜ் பொம்மை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில், சில தொகுதிகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். வேட்பாளர் தேர்வு முதல் பிரசாரம் வரை அனைத்தையும் இந்த தொகுதிகளில் அண்ணாமலையே முன்னின்று முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
indiatvnews link l hindustantimes link
இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு அண்ணாமலைதான் காரணம் என்பதுபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக வலைதள பயனாளர்கள் (திமுக ஆதரவாளர்கள்) தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கேற்ப, அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததே தோல்விக்குக் காரணம் என்று பாஜக சார்பாக முதலமைச்சர் பதவி வகித்த பசவராஜ் பொம்மை கூறியதாக, மேற்கண்ட வகையில் சிலர் செய்தி பரப்புகின்றனர்.
உண்மையில், இது ஒரு எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு; ஆம், நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் இத்தகைய பின்னடைவு ஏற்பட்டதை எதிர்பார்க்கவில்லை என்றுதான் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார். அதனை அப்படியே எடுத்து, சில புதிய வார்த்தைகள் சேர்த்து, எடிட் செய்து சிலர் வதந்தி பரப்பியுள்ளதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, மற்ற ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Deccanherald link l The Hindu link
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title: அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது தவறு என்று பசவராஜ் பொம்மை கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Altered