FactCheck: கருப்பழகி என்ற கின்னஸ் சாதனை படைத்த சூடான் மாடல் நியாகிம்: உண்மை என்ன?

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’சூடான் பெண் உலகிலேயே கருப்பான தோல் கொண்டவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்,’’ எனக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

குறிப்பிட்ட ஃபேஸ்புக் தகவலை, வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது சாட்போட் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:
இதன்படி, முதலில் இவர்கள் குறிப்பிடுவது போல, நியாகிம் என்று யாரேனும் மாடல் உள்ளாரா என விவரம் தேடினோம். அப்போது, தெற்கு சூடான் பின்னணியை சேர்ந்த அமெரிக்க மாடல் Nyakim Gatwech என்று ஒருவர் உள்ளதாக, தெரியவந்தது. 

Nyakim Gatwech Instagram Link

கருப்பாக இருப்பதால், கருப்பு ராணி என வர்ணிக்கப்படும் இவர், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம், ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பிக்சர்தான், நாம் பார்க்கும் ஃபேஸ்புக் தகவல்களிலும் பகிரப்பட்டுள்ளதாகும். 

ஆனால், அவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா என்றால் இல்லை என்பதே பதில். 

Human Body என்ற பிரிவில், Guinness World Records பல விதமான சாதனைகளை அங்கீகரித்துள்ளது. நீளமான வாய், நகம், மீசை என்று… அவற்றின் பட்டியலை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். ஆனால், இதில், தோலின் நிறம் கருப்பு அல்லது சிவப்பு என்பதன் அடிப்படையில் எந்த சாதனையும் அங்கீகரிக்கப்படவில்லை.

Guinnessworldrecords/records Link 

இதற்கடுத்தப்படியாக, இந்த தகவல் பற்றி, கின்னஸ் உலக சாதனை அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளதைக் கண்டோம்.

Archived Link

மேலும், இதுதொடர்பாக, தவறான தகவல் பரப்பியதற்காக, ட்விட்டரில் ஒருவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் இதனை பேசி உறுதிப்படுத்தியுள்ளார். 

Tweet Link

எனவே, கின்னஸ் உலக சாதனை அமைப்பு எதையும் அங்கீகரிக்காத நிலையில், சூடான் பெண்ணை உலகிலேயே கருப்புத் தோல் கொண்டவர் என்று அங்கீகரித்துவிட்டதாக, வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இதுதொடர்பாக, நமது ஆங்கில பிரிவினர் நடத்திய உண்மை கண்டறியும் சோதனை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கருப்பழகி என்ற கின்னஸ் சாதனை படைத்த சூடான் மாடல் நியாகிம்: உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False