Beast படத்தின் பாடல் பாடும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘Beast படத்தின் பாடல் பாடும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ அரசு பள்ளிகள் கல்வி நிலையங்களா அல்லது கலைக்கூத்தாடும் கம்பெனியா? பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களே இது தான் நீங்க மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் முறை அசிங்கமாக இல்லை உங்களுக்கு அரசியல் செய்ய இடம் இல்லையா #TVKFails,’’ என்று  எழுதப்பட்டுள்ளது. இதனுடன், விஜய் நடித்த Beast படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை அரசுப் பள்ளி மாணவர்கள் பாடுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, குறிப்பிட்ட Beast பாடலை எழுதிய சினிமா பாடலாசிரியர் கு.கார்த்திக், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை கடந்த ஜூன் 21, 2022 அன்று பகிர்ந்துள்ளதைக் கண்டோம். 

இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரல் செய்யப்படும் நிலையில், இதுபற்றி பாடலாசிரியர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும், இது 4 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்று, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். 

இதன்மூலமாக, பழைய வீடியோவை எடுத்து, வேண்டுமென்றே தற்போது வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: Beast படத்தின் பாடல் பாடும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: Misleading

Leave a Reply