
‘‘பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா என்று பதிவு வெளியிட்ட திரிஷா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ Happy Birthday Anna,’’ என்று கூறி விஜய் புகைப்படத்தை நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது திரிஷா பெயரில் வேண்டுமென்றே பகிரப்படும் போலியான பதிவு, என்று தெரியவந்தது.
இதன்படி, திரிஷாவின் X மற்றும் Instagram பக்கங்களில் தகவல் தேடினோம். ஆனால், இதுபோன்ற எந்த பதிவையும் அவர் வெளியிடவில்லை. விஜய் பிறந்த நாளுக்கு திரிஷா வாழ்த்து கூறவில்லை என்று தகவல் வெளியான நிலையில் சற்று தாமதமாக, ஜூன் 23, 2026 அன்று திரிஷா பதிவு வெளியிட்டார். எனினும், அண்ணா என்று அவர் விஜய் பற்றி எதுவும் கூறவில்லை.
இதுதொடர்பாக, திரிஷா தரப்பில் கேட்டபோது, இது போலியான பதிவு, என்று தெரிவித்தனர். மேலும், wasitai, hive moderation, photoshopdetector போன்ற இணையதளங்கள் உதவியுடன் சரிபார்த்தபோது, இது எடிட் செய்யப்பட்ட பதிவுதான், என்று தெளிவானது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


