தமிழ்நாடு மின்சார தொடரமைப்புக் கழகம் வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political

‘‘தமிழ்நாடு மின்சார தொடரமைப்புக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ தமிழ்நாடு மின்சார தொடரமைப்பு கழகம் –  களப்பணியாளர் –  தொழில்நுட்பவியலாளர் –  அலுவலக உதவியாளர் –  ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026. நேரடி பணி நியமனம். பதவிகள்: களப்பணியாளர், தொழில்துட்பவியலாளர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்; தகுதி: 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ (ITI) அல்லது டிப்ளமோ (Diploma); சம்பளம்: 31,500 – ₹ 46,000 + கொடுப்பனவுகள்; கடைசித் தேதி: அக்டோபர் 31, 2026-உடனடியாக விண்ணப்பிக்கவும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்பட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதனை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TANGEDCO) மறுத்துள்ளதாக, தெரியவந்தது.  

https://x.com/TANGEDCO_Offcl/status/2067111611006115904 Embed 

இதன்படி, ‘’ “எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்” என்று பரப்பப்படும் TANTRANSCO ஆட்சேர்ப்பு குறித்த இந்த அறிவிப்பு முற்றிலும் போலியானது மற்றும் மோசடியானது ஆகும். இத்தகைய எந்தவொரு விளம்பரத்தையும் TANTRANSCO வெளியிடவில்லை. தகுதியான மற்றும் உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அனைத்தும் எங்களது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpdcl.org பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாறவோ அல்லது பணம் செலுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,’’ என்று TANGEDCO விளக்கம் அளித்துள்ளது.   

கூடுதல் ஆதாரத்திற்காக, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அலுவலகத்திலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Result Stamp

Title: தமிழ்நாடு மின்சார தொடரமைப்புக் கழகம் வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிட்டதா?

Written By: Pankaj Iyer

Result: False

Leave a Reply