
‘‘திமுக ஆட்சியில் காவல்துறைக்கு நேர்ந்த அவலம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ஸ்டாலின் முதல்வராக இருக்கும் வரை உடன்பிறப்புகள் யாரும் காவல் துறையை கண்டு கடுகு அளவு அஞ்ச மாட்டார்கள்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம் என்று குறிப்பிட்டு, போலீஸ் சீருடை அணிந்த நபர் இளைஞர் ஒருவரை தாக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதற்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.

இதன்படி, சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் போதை இளைஞர் ஒருவர் தரக்குறைவாக நடந்துகொண்டதால், அவரை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
New Indian Express l Raj News Tamil
RPF என்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறையாகும். இதற்கும், தமிழ்நாடு அரசு மற்றும் போலீஸ்க்கும், எந்த தொடர்பும் இல்லை.
கூடுதல் ஆதாரத்திற்காக, தமிழ்நாடு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவரின் வீடியோவை எடுத்து, தமிழ்நாடு போலீஸ் உடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:திமுக ஆட்சியில் காவல்துறைக்கு நேர்ந்த அவலம் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


