FACT CHECK: பத்திரிகையாளர் செந்தில் பெயரில் பரவும் போலி ட்வீட்!
ஒன்றிய அரசை மிரட்டிய ஸ்டாலின் என்று பத்திரிகையாளர் செந்தில் ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பத்திரிகையாளர் செந்தில் வெளியிட்டது போன்ற ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், "நீட் தேர்வு,குடியுரிமை சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய பிரதமருக்கு கட்டளை பிறப்பித்து அதிரடி அஸ்திரம் காட்டியிருக்கிறார்.. மிரட்டிய முத்துவேல் கருணாநிதி, மிரண்ட ஒன்றிய அரசு.." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
Manikandan M என்பவர் 2021 ஜூன் 18ம் தேதி இந்த ஸ்கிரீன் ஷாட் பகிர்ந்துள்ளார். நிலைத் தகவலில், "இந்த நாய்க்கு ரெண்டு பிஸ்கட் இருந்தா போடுங்க பாவம் ரொம்ப குறைக்கிது, !!!" என்று குறிப்பிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரபலமானவர்கள் பெயரில் போலியான ட்விட்டர் அக்கவுண்டை தொடங்கி, அவர்களுடைய ப்ரொஃபைல், டிஸ்பிளே இமேஜை வைத்து தங்கள் இஷ்டத்துக்கு பதிவிட்டு அதை வைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவதைச் சிலர் வாடிக்கையாகச் செய்துவருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் நாராயணன் திருப்பதி பெயரில் ட்வீட் பதிவுகள் சமூக ஊடகங்களில் இப்படி பரவிய நிலையில், தற்போது பத்திரிகையாளர் செந்தில் பெயரில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
இந்த ட்வீட்டை உண்மையில் செந்தில்தான் வெளியிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்தோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். அதில் அப்படி எந்த பதிவும் இல்லை. ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள ட்வீட் முகவரியும் செய்தியாளர் செந்திலின் ட்வீட் முகவரியும் சரியாக உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, @Senthilvel79 என்ற பெயரில் கூடுதலாக ஒரு l சேர்த்து @Senthillvel79 என்று போலியாக ட்வீட் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரிந்தது.
அந்த ட்வீட் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் sarcasm என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது கிண்டல், ஏளனம் அல்லது நையாண்டி என்று அர்த்தம் கொள்ளலாம். இதன் மூலம் இந்த ட்வீட் பதிவுக்கும் செய்தியாளர் செந்திலுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: Twitter I Archive
இந்த போலியான ட்விட்டர் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட்டில் இருந்த பதிவு இருந்தது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பத்திரிகையாளர் செந்தில்வேல் பெயரில் பரவும் ட்வீட் பதிவு உண்மையில் அவருடையது இல்லை, அவர் பெயரில் உருவாக்கப்பட்ட போலி அக்கவுண்டில் இருந்து பதிவிடப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பத்திரிகையாளர் செந்தில் பெயரில் பரவும் போலி ட்வீட்!
Fact Check By: Chendur PandianResult: False