சான்றிதழ்களை தவறவிட்ட இளைஞர்; இந்த மொபைல் எண்கள் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’இளைஞர் ஒருவர் தவறவிட்ட சான்றிதழ்களை பத்திரமாக எடுத்து வைத்துள்ளோம், இந்த மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049044263 மற்றும் +91 9049053770 ஆகிய நமது வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பி, உண்மையா என்று தொடர்ச்சியாகச் சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில் நாமும் தேடியபோது, ஃபேஸ்புக் போன்றவற்றிலும் இந்த தகவல் உண்மை போல பகிரப்படுவதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலில் தரப்பட்டுள்ள +919626619212 , +919698653075, 

+919566660856 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயற்சித்தோம். முதல் 2 எண்களும் பயன்பாட்டில் இல்லை என்று பதில் கிடைத்தது. அடுத்தப்படியாக, 3வது எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அது தொடர்ந்து பல மணிநேரமாக, ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவே பதில் கிடைத்தது.

எனவே, யாரோ ஒரு இளைஞரின் சான்றிதழ் காணாமல் போன நிலையில், அவற்றை எடுத்த நபர் உதவி செய்யும் நோக்கில் கூட இந்த தகவலை முதலில் சமூக வலைதளங்களின் வழியே பகிர்ந்திருக்கலாம். இதனைப் பார்த்து சம்பந்தப்பட்ட நபரும் அவற்றை திரும்பப் பெற்றிருக்கலாம். அதன் பிறகும் கூட இந்த மெசேஜ் தொடர்ந்து பகிரப்படுவதால், ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் அந்த எண்களை பயன்பாட்டில் இருந்து நீக்கியிருக்கலாம், என தெரியவருகிறது. இந்த மெசேஜ் நம்பகமானது இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நமது வாசகர்கள் இதனை தொடர்ந்து மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:சான்றிதழ்களை தவறவிட்ட இளைஞர்; இந்த மொபைல் எண்கள் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading