‘’பாஜக தலைவர் பதவி பெற எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு என்று பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் கேள்வி,’’ என ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில் ‘’பொன்னாரை விட எச்.ராஜாவை விட அண்ணாமலை மிகச் சிறந்தவர்.
பார்ப்பனர் என்பதை தவிர்த்து எச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு- எஸ்.ஆர்.சேகர் கேள்வி,’’ என எழுதப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையா என நாம் நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இது வழக்கம்போல எங்களது பெயரில் பரவும் வதந்தி,’’ என்றார்.

இதையடுத்து, குறிப்பிட்ட செய்தி நியூஸ்7 தமிழ் பெயரில் பரவும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:எச்.ராஜா தகுதி என்ன என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேட்டாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False