FACT CHECK: நொய்டா விமான நிலையத்தின் மாதிரி என்று பரவும் தென் கொரியா புகைப்படம்!

அரசியல் ஆன்மிகம் இந்தியா

நொய்டாவில் அமைய உள்ள புதிய விமான நிலையத்தின் மாதிரி தோற்றம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நொய்டா சர்வதேச விமானநிலையத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்று ஒரு நீண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பதிவில் நொய்டாவில் அமைய உள்ள புதிய விமானநிலையத்தின் மாதிரி வடிவமைப்பு என்று குறிப்பிடவில்லை. ஆனால், பிரதமர் மோடியுடன விமான நிலைய படத்தை சேர்த்து பகிர்ந்திருப்பதன் மூலம் நொய்டாவில் அமைய உள்ள விமான நிலையம் இப்படித்தான் இருக்கும் என்பது போன்ற தோற்றத்தை இந்த பதிவு உருவாக்கியது. 

இந்த பதிவை Kamali Ganesan Hindu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியை ஒட்டியுள்ள உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் சர்வதேச விமான நிலையத்தை மத்திய அரசு அமைக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. புதிய விமான நிலையத்தால் உத்தரப்பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பல மாநிலங்கள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் நொய்டாவில் அமைய உள்ள விமான நிலையம் என்று கூறி பல்வேறு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: archdaily.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த படம் தென் கொரியாவின் தலைநகர் சீயோலில் உள்ள இங்கியோன் சர்வதேச விமான நிலையத்தின் தோற்றம் என்று தெரியவந்தது. தென்கொரியாவின் சீயோல் விமான நிலையத்தின் டெர்மினல் 2-வின் மாதிரி தோற்றம் என்றும், அதன் கட்டுமானப்பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் கிடைத்தன. 

அசல் பதிவைக் காண: Google Map 

நொய்டா விமான நிலையத்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்று பார்த்தோம். அப்போது நொய்டா விமான நிலையத்தின் மாதிரி என்று சில படங்கள் கிடைத்தன. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அந்த மாதிரியைப் பார்வையிடுவது போன்ற படமும் கிடைத்தது. 

அசல் பதிவைக் காண: indiatimes.com I Archive 1 I newsroompost.com I Archive 2

விமான நிலையம் எப்படி இருக்கும் என்று விமான நிலையத்தின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவுகள் வெளியாகி இருந்தன. அந்த மாதிரிக்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தின் வடிவமைப்புக்கும் துளியும் தொடர்பு இல்லை. இதன் மூலம் நொய்டா விமான நிலையத்தின் மாதிரி என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதியாகிறது.

Archive

இன்னும் சிலர் பல்வேறு விமான நிலையங்களின் படங்களை எல்லாம் ஒரே பதிவில் பகிர்ந்து நொய்டா விமான நிலையம் என்று குறிப்பிட்டு வருவதைக் காண முடிந்தது. அவை பற்றியும் ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

லண்டன் விமான நிலையம், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள விமானநிலையம், ரஷ்யாவின் Ashkhabad விமான நிலையத்தின் மாதிரி என பல்வேறு சர்வதேச விமான நிலையங்களின் படங்களையும் நொய்டா விமான நிலையம் என்று கூறி பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. நொய்டா விமான நிலையத்தின் உண்மையான படத்தைப் பகிராமல், அழகாக இருக்கிறது என்று பல வெளிநாட்டு விமான நிலையங்களின் படங்களைப் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: theguardian.com I Archive

முடிவு:

சியோல், சீனா உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்கள் நொய்டா விமான நிலையத்தின் மாதிரி வடிவம் என்று தவறாக பகிரப்பட்டு வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நொய்டா விமான நிலையத்தின் மாதிரி என்று பரவும் தென் கொரியா புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False