கொரோனா காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்ததா தமிழ்நாடு அரசு?

முருக மாநாட்டைத் தடுக்கும் விதமாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சத்தியம் டிவி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என்று இருந்தது.  நிலைத் தகவலில், “திமுகவுக்கு_பயம்_வந்துவிட்டது […]

Continue Reading

100 சதவிகிதம் கொரோனாவை தடுக்கும் மருந்துக்கு அரசு அங்கீகாரம் என்று பரவும் தகவல் உண்மையா?

100 சதவிகிதம் கொரோனாவைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “கொரானாவுக்கு எளிய மருந்து!” என்று போட்டோ பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் […]

Continue Reading

கொரோனா நோயாளிகள் ஆஸ்பிடோஸ்பெர்மா மருந்து சாப்பிட்டால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்குமா?

கொரோனா நோயாளிகளுக்கு சுவாசத்திணறல் பிரச்னை ஏற்பட்டால் ஆஸ்பிடோஸ்பெர்மா என்ற ஹோமியோபதி மருந்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஸ்பிடோஸ்பெர்மா (Aspidosperma) என்ற ஹோமியோபதி மருந்தின் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கொரோனா தொற்று மீண்டும் தொடரும் இந்த காலங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால் பீதி அடைய வேண்டாம், ஹோமியோபதி மருந்து […]

Continue Reading

கொரோனா வசூல் பணத்தில் புடவை வாங்கிய துர்கா ஸ்டாலின் என்று பரவும் விஷம பதிவு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி கொரோனா நிவாரண நிதி வசூலில் இருந்து ரூ.1 கோடிக்கு புடவை வாங்கி அணிந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானி குடும்பத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ரூ.1 கோடி தங்க […]

Continue Reading

நேரடியாக மூளையைத் தாக்கும் கொரோனா… மரணம் நிச்சயம் என்று பரவும் செய்தி உண்மையா?

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கும் என்று ஒரு தகவல் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Youtube “நேரடியாக மூளையைத் தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான்” என்று வீடியோ ஒன்று யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீனாவில் பரவி வரும் BA.5 வகை கொரோனா பற்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்றும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முதலமைச்சருக்கு கொரனா தொற்று. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Continue Reading

வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாகப் பரவும் வதந்தி!

வறட்டியால் கொரோனாவை விரட்டுவோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வரட்டியால் கொரோனாவை விரட்டுவோம். பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை எரிப்பதால் கொரோனா வைரஸ் அழிகிறது – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்” என்று […]

Continue Reading

FACT CHECK: ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே திரைப்படம் வந்ததா?

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே படம் வந்துவிட்டது என்றும், திட்டமிட்டபடி கொரோனா வைரஸ் பரவல் நடந்து வருகிறது என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “The omicron Variant” என்ற திரைப்படம் ஒன்றின் போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த நாகரீக வாழ்வே.. அவன் கட்டமைத்த நாடக மேடையில் தான்.. அதில் இருந்துகொண்டு நம்மை நாம் உணரமுடியாது..எல்லாமே […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வேரியண்ட் வெளிப்படும் காலம் தொடர்பான அட்டவணையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளதா?

புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா எப்போது வெளியாகும், அதன் அறிவியல் பெயர் என்ன என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் ரகசியமாக பட்டியல் தயாரித்து வைத்திருந்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜான்ஸ் ஹாப்கின்ஸ், வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் லோகோவோடு கூடிய பட்டியலை யாரோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அதை […]

Continue Reading

FACT CHECK: புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

புதிய வகை கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு சற்றுமுன் வந்த தகவல் புதிய வகை.!! கொரோனா பரவலால் […]

Continue Reading

FACT CHECK: பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதா?

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று ஒரு செய்தியின் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மூக்கு வரை முழுமையாக மாஸ்க் அணியாத புகைப்படத்துடன் கூடிய என்டிடிவி தமிழ் வெளியிட்டது போன்ற செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “பிரதமர் மோடிக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயிற்றுவிக்க […]

Continue Reading

FACT CHECK: கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருந்து இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

கொரோனாவை இரண்டே மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமூக ஊடகங்களில் யாரோ பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தோனேசியா நாட்டில் இப்போது கொரோனாவை 2மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளனர். ஒரு இளநீரில், ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் பாதி எலுமிச்சைபழச்சாறு […]

Continue Reading

FactCheck: இந்த புகைப்படம் கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்டதில்லை!

‘’கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம், சீட்டுக்குப் பதிலாக படுக்கைகள் நிறுவியுள்ளனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் கூட பலரும் இதனை உண்மை என நம்பி, கருத்து பகிர்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது ஸ்விட்சர்லாந்தில் உள்ள […]

Continue Reading

FACT CHECK: கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பற்றி எரியும் பாரீஸ் என்று பரவும் படம் உண்மையா?

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாரீஸ் நகரமே பற்றி எரிகிறது என்ற வகையிலும் புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போராட்டம் நடைபெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பூசிக்கு எதிராக பற்றி எரியும் பாரீஸ்… பிரான்ஸில் மக்ரோனின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் […]

Continue Reading

FACT CHECK: மோடி பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

கொரோனா உருமாற்றம் பற்றி பிரதமர் மோடி பேசியது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை விஷமத்தனமாக எடிட் செய்து சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருவது வைரல் ஆகியுள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் இளமைக் கால புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை இணைத்து சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை! உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் […]

Continue Reading

FACT CHECK: கொரோனா பரிசோதனை என்று கூறி வீட்டில் திருட்டா?- உண்மை அறிவோம்

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாக கூறி மயக்கமடையச் செய்து நகை திருடிச் சென்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிக்கை ஒன்றில் வந்த செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். அதில், “இப்படியும் நடக்குது கொள்ளை உங்க வீட்டுக்கும் வரலாம், உஷார்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. செய்தியின் உள்ளே, “சென்னை திருமுல்லைவாயலைச் சார்ந்த போலீஸ்காரர் வீட்டில் […]

Continue Reading

FACT CHECK: மருத்துவமனை வேண்டாம், கோயில்தான் வேண்டும் என்று கோஷம் எழுப்பிய நபர் கொரோனாவுக்கு பலியா?

மருத்துவமனை வேண்டாம், ராமர் கோயில்தான் வேண்டும் என்று கோஷமிட்ட நபர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் மரணம் அடைந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புகைப்படம் ஒன்றில் இந்தி மற்றும் தமிழில் டைப் செய்யப்பட்டு பதிவிடப்பட்டு இருந்தது. அதில், “இவர் தான் எங்களுக்கு மருத்துவமனை வேண்டாம் கோயில்கள் தான் வேண்டும் என்று கூவியவன் இவன் […]

Continue Reading

FACT CHECK: மின் மயானத்தின் அவல நிலை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?

சென்னை மின் மயானத்தின் அவல நிலை என்று இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை மின் மயானத்தில் நிகழும் அவலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bjp Ramkumar என்பவர் 2021 மே 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

FACT CHECK: குஜராத்தில் ஜியோ மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்துக் கொளுத்தினார்களா?

குஜராத்தில் ஜியோ 5ஜி மொபைல் டவரை பொது மக்கள் தீ வைத்து எரித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செல்போன் டவர் தீப்பிடித்து எரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வளர்ச்சி நாயகன் #மோடியின் குஜராத்தில் அம்பானியின் #ஜியோ 5ஜி டவரை தீயிட்டு கொளுத்திய மக்கள்… அப்படி […]

Continue Reading

FACT CHECK: கொரோனா நிவாரண நிதி பெற முன்பதிவு செய்யுங்கள் என்று பியூஷ் மனுஷ் நம்பரை பரப்பிய விஷமிகள்!

கொரோனா நிவாரண நிதி ரூ.2500 பெற 9443248582 என்ற எண்ணிற்கு போன் செய்து முன்பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட படத்துடன் கூடிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல் வாக்குறுதி […]

Continue Reading

FACT CHECK: இலவச ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு கட்டணம் நிர்ணயித்ததா தமிழக அரசு?

இதுவரை இலவசமாக இருந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive  பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 கட்டணம்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “நேற்று […]

Continue Reading

FACT CHECK: திரிபுரா முதல்வர் பிப்லப் மாட்டுச் சாண குளியல் மேற்கொண்டதாக பரவும் வீடியோ உண்மையா?

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் மாட்டு சாணத்தை குடித்து, குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஒருவர் மாட்டுச் சாணத்தைக் குடித்துவிட்டு, குளிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் உள்ளவர், இந்தியில் ஏதோ கூறிவிட்டு சாணத்தை குடித்துவிட்டு, குளிக்கிறார். நடு நடுவே மா மா என்று கத்துகிறார். […]

Continue Reading

FACT CHECK: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதியா?- இது போபால் படம்!

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 800 ஆக்சிஜன் படுக்கை வசதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட அரங்கில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆயிரம் படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது இதில் 800 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FACT CHECK: ஆக்சிஜன் வாங்க ரூ.15 கோடி வழங்கினாரா எம்.எஸ்.தோனி?

கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் வாங்க தன்னுடைய ஐ.பி.எல் சம்பளம் ரூ.15 கோடியை எம்.எஸ்.தோனி வழங்கினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எம்.எஸ்.தோனியின் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனது ஐபிஎல் முழு சம்பளத்தையும்15கோடி யை ஆக்ஸிஜன் வாங்குவதற்கு மட்டுமே வழங்கிய #எம்எஸ்_தோனி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல” என்று […]

Continue Reading

FACT CHECK: 101 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ளூ பெருந்தொற்று காலத்தில் எடுத்த படங்களா இவை?

தற்போது கொரோனா பரவல் சூழலைப் போன்று 101 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ – சுகாதார சூழல் இருந்ததாகவும் எப்போது எடுக்கப்பட்ட படம் என்றும் சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விதவிதமான மாஸ்க் அணிந்திருப்பது, ஆம்புலன்ஸ், மருத்துவமனைகள் போன்றவற்றின் பழங்கால படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “101 ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்ற ஒரு கால சூழ்நிலையில் […]

Continue Reading

FACT CHECK: தந்தைக்கு ஆக்சிஜன் இல்லை என்று கதறும் மகள்; இந்த வீடியோ குஜராத்தில் எடுத்ததா?

குஜராத்தில் தந்தைக்கு ஆக்சிஜன் இல்லை என்று மகள் கதறுகிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் கதறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. காட்சி மீடியா நபர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயல, அவர் மைக்கை தட்டிவிட்டு கதறுகிறார். நிலைத் தகவலில், “குஜராத்தில் தந்தைக்கு ஆக்சிஜன் இல்லாமல் கதறும் மகள். திருந்துங்கடா பான்பராக் வாயனுங்களா..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

FACT CHECK: குஜராத் கொரோனா கொடூர காட்சிகள் என்று பகிரப்படும் வேறு மாநில புகைப்படங்கள்!

குஜராத்தின் மாடல் இதுதான் என்று மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு பேர் ஆக்சிஜன் மாஸ்க் உடன் படுத்திருப்பது, சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவை குஜராத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் போட்டபடி இரண்டு பேர் ஒரே படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் மற்றும் சுடுகாட்டில் வரிசையாக பிணங்கள் எரிக்கப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் மாடல் இதுதான்! […]

Continue Reading

FACT CHECK: ஹரித்வார் கும்பமேளா என்று பகிரப்படும் பழைய படங்கள்!

கொரோனா காலத்தில் ஹரித்வார் கும்பமேளாவுக்கு கூடிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இந்தியாவில் கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஹரித்வார் கும்பமேளா 2021ல் கூடிய கூட்டம் என்று சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. Senthilkumar Ksp Senthilkumar Ksp என்பவர் வெளியிட்டிருந்த பதிவில், “இந்த கும்பமேளா கும்பல் தான் இனி இந்தியா […]

Continue Reading

FACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா?- விளக்கம் அளித்த பிறகும் பரவும் வீடியோ

தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மருத்துவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்ற பாலிமர் டிவி வெளியிட்ட செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. செவிலியர் ஊசியை அழுத்தாமல், போடுவது போல போஸ் கொடுக்கிறார். போட்டு முடித்தது போல வெற்றி சின்னத்தைக் காட்டியபடி பெண் ஒருவர் எழுந்திருக்கிறார். […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வைரஸ் கிருமியை உருவாக்கிய நிறுவனம்தான் தடுப்பூசியும் தயாரித்ததா?

சீனாவின் வூகானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மாதிரி படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்லாமே_தற்செயலாக……… சீனாவின் Wuhan (வுஹான்) மாகாண‌த்தில் […]

Continue Reading

FACT CHECK: குடகு கலெக்டருக்கு மக்கள் நன்றி செலுத்தியதாகப் பரவும் தவறான வீடியோ!

குடகு மாவட்டத்தில் நர்ஸாக பணியாற்றியவர் அதே மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக உயர்ந்தார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாட்ஸ்அப் சாட்பாட்டுக்கு வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார்.  இளம் பெண் ஒருவர் நடந்து வர, அவருக்கு ஆண்களும் பெண்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பலரும் அவருடைய காலில் விழுந்து ஆசி பெற […]

Continue Reading