FACT CHECK: மோடி பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

அரசியல் சமூக ஊடகம் சர்வதேசம்

கொரோனா உருமாற்றம் பற்றி பிரதமர் மோடி பேசியது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை விஷமத்தனமாக எடிட் செய்து சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருவது வைரல் ஆகியுள்ளது.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடியின் இளமைக் கால புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை இணைத்து சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை! உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும்; கொரோனா 3வது அலையை விரைவாக தடுக்க வேண்டும்! 6 மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு” என்று இருந்தது.

நிலைத் தகவலில், “பிரேக்கிங்க் நியூஸ்செல்லாம் மீம்ஸா போடுறாங்க..! அடேய் சன் டிவி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Bala Salem என்பவர் 2021 ஜூலை 16ம் தேதி பகிர்ந்துள்ளார். இவரைப் போல ஏராளமானவர்கள் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

6 மாநில முதலமைச்சர்கள் உடனான கூட்டத்தில் பிரதமர் மோடி உருமாற்றம் அடைந்த வைரஸ் ஆபத்தானவை என்று பேசினார் என்று செய்தி வெளியானது உண்மைதான். ஆனால், இந்த புகைப்படங்கள் விஷமத்தனமாக இருந்தது. மோடியின் இளமைக் கால புகைப்படம் மற்றும் சமீபத்திய புகைப்படங்களை இணைத்துப் பதிவிட்டிருப்பதன் மூலம் மோடி உருமாற்றம் அடைந்தது போன்று விஷமத்தனமாக நியூஸ் கார்டு இருந்தது. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உருமாற்றம் அடைந்த வைரஸ் யார் என்று விஷமத்தனமான கேள்வி எழுப்பியபடி பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சன் நியூஸ் விஷமத்தனமாக இந்த நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளது என்றும் கூறி சிலர் பதிவிட்டிருந்தனர். எனவே, சன் நியூஸ் தொலைக்காட்சி உண்மையில் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று பார்த்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஜூலை 16ம் தேதி வெளியான சன் நியூஸ், நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, விரல் நீட்டி மோடி பேசுவது போன்ற படத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் “இது போலியானது. எங்கள் நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்” என்றார்.

சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் மூலம் சன் நியூஸ் மீம்ஸ் வடிவில் செய்தி வெளியிட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முடிவு:

உருமாற்றம் அடைந்த கொரோனா பற்றி பிரதமர் மோடி பேசியது தொடர்பாக வெளியான சன் நியூஸ், நியூஸ் கார்டு போலியானது, எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடி பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply